பொருளாதாரப் போர் தொடங்கியுள்ளது

கரோனா வைரஸ் பெருந்தொற்றால் நாட்டின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப் பட்டுள்ளது, அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று எதிர் பார்க்கிறோம் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்

பாஜக சார்பில் நடந்த ஜன் சம்வாத்காணொலி பேரணியில் நாக்பூரில் இருந்தவாறு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பாஜக தொண்டர்களிடம் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

கரோனா வைரஸ் பெருந்தொற்றால் நாட்டின் பொருளதாரம் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளது. அரசுக்கு ஏறக்குறைய ரூ.10லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படு்ம் என எதிர் பார்க்கிறோம்.
கடந்த 55 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்ய முடியாத விஷயங்கள், செயல்கள் அனைத்தையும் நரேந்திர மோடி அரசாங்கம் கடந்த 5ஆண்டுகளில் செய்துள்ளது. பொருளாதாரப் போர் தொடங்கியுள்ளது. நம்முடைய கிராமங்களில் விவசாயிகள், தொழிலாளர்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் கரோனாவால் சிக்கலில் இருக்கின்றன, மிகப் பெரிய சிரமத்தையும், துன்பத்தையும் சந்திக்கிறார்கள்.

இந்தியஅரசின் வருவாயும் கரோனாவால் பாதிக்க பட்டுள்ளது. ரூ.200 லட்சம் கோடி ஜிடிபி கொண்ட நம்நாட்டில் பொருளா தாரத்தை மீட்க ரூ20 லட்சம் கோடி அளவுக்கு விவசாயிகள், தொழிலாளர்களுக்கு பொருளதாார சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளோம்.

ரூ200 லட்சம் கோடி ஜிடிபில் ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்புத்திட்டம், ரூ.10 லட்சம் கோடி வருவாய் இழப்பு என்றால் நினைத்துப்பாருங்கள் மத்திய அரசு இக்கட்டான சூழலைத்தான் எதிர்கொண்டுவருகிறது.

அனைவரும் கடினமான காலத்தை எதிர்கொண்டு வருகிறோம், சிக்கலை சந்தித்துவருகிறோம். இந்ததுன்பத்தை, சி்க்கலை நாம் எதிர்மறையாகவோ, வெறுப்புடனோ, அச்சத்துடனோ எதிர்நோக்கமுடியாது. கரோனா வைரஸை தன்னம்பிக்கையுடனும், நேர்மறை சிந்தனையுடனும் எதிர்கொள்கிறோம்.

கரோனா வைரஸுக்கு தடுப்புமருந்து விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று நம்புகிறேன். அதுவரை நாம் கரோனாவுடன் போராடவேண்டியது இருக்கும். தேசியவாதம் என்பது பாஜகவின் முன்னுரிமை, சித்தாந்தம். இந்தவிஷயத்தை முன்னிறுத்திதான் மாவோயிஸ்ட்களையும், தீவிரவாதிகளையும் மோடி அரசு அணுகுகிறது, இரும்புக் கரம்கொண்டு அடக்குகிறது.

முதல்முறையாக மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்தபோது, மாவோயிஸ்ட்களையும், தீவிரவாதிகளையும் துணிச்சலுடன் அடக்கியது இதற்குமுன் வந்த அரசுகளால் அதைச் செய்யமுடியவில்லை.

காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் அளிக்கும் 370பிரிவு ரத்து, முத்தலாக் ரத்து, ராமர் கோயில் கட்டுவதற்கு தடைகளை அகற்றியது என மோடி அரசின் சாதனைகள் ஏராளம்

இ்வ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...