நெருக்கடி மனநிலை காங்கிரஸ் கட்சிக்கு இப்போதும் அகல வில்லை

நெருக்கடி மனநிலை காங்கிரஸ் கட்சிக்கு இப்போதும் அகல வில்லை,. ஒரு குடும்பத்தின் நலன் தான் காங்கிரஸ் கட்சியின் நலனாகவும், தேசத்தின் நலனாகவும் உள்ளது.45 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான், ஒருநாள் இரவில் இந்ததேசம் சிறைச்சாலையாக மாறியது .

இந்த காலக்கட்டத்தில் பத்திரிகை, நீதிமன்றம், பேச்சுசுதந்திரம், அனைத்தும் காலில்போட்டு மிதிக்கப்பட்டன. ஏழைகள், விளிம்புநிலைச் சமூகத்தில் இருப்பவர்கள் மீது அட்டூழியங்களும், அடக்கு முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன. பலலட்சம் மக்களின் மிகப்பெரிய முயற்சிகளால் தேசத்தில் அவசரநிலை நீக்கப்பட்டு, ஜனநாயகம் மீண்டது. ஆனால், இன்னும் காங்கிரஸ் கட்சியில் இன்னமும் ஜனநாயகம் இல்லாமல் தான் உள்ளது.

ஒரு குடும்பத்தின் நலன்தான் காங்கிரஸ் கட்சியின் நலனாகவும், அதுவே தேசத்தின் நலனாகவும் இருந்தது. இந்தகவலை தரும் நிலை இன்றும், இன்றைய காங்கிரஸில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் அண்மையில் நடந்தது அதில் மூத்த தலைவர்கள், இளம்தலைவர்கள் சிலப் பிரச்சினைகளை எழுப்பி இருக்கிறார்கள் ஆனால், அவர்கள்பேச்சு கவனிக்கப்பட வில்லை. காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மரியாதையின்றி நீக்கப்பட்டார். வேதனைக்குரிய உண்மை என்னவென்றால், காங்கிரஸில் உள்ள தலைவர்கள் தங்களால் எந்த விதமான கருத்தையும் தெரிவிக்க முடியவில்லை. அதற்கு சுதந்திரம் இல்லை என்று தெரிவிக்கிறார்கள்.

ஏன் எமர்ஜென்சி மனநிலையில் இன்னும்இருக்கிறோம் என இந்தியாவின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ்கட்சி, தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொள்வது அவசியம்

ஒருகுடும்பத்தின் வாரிசுகளை தவிர மற்ற தலைவர்களால் ஏன் கட்சிக்குள் பேச முடியவில்லை என்பதை காங்கிரஸ் கேட்கவேண்டும்? காங்கிரஸ் கட்சியில் உள்ள தலைவர்கள் ஏன் மனம் வெறுக்கிறார்கள் என்று அந்தகட்சி தனக்கு தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.? மக்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்குமான இடைவெளி அதிகரித்து கொண்டே செல்கிறது இதுபற்றி அந்தகட்சி கேட்கவேண்டும்?”. இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.

 உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றிபெற்றது செல்லாது என்று அவரது எம்பி பதவியை பறித்து அலகபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி உறுதி செய்தது. எனினும் இந்திரா காந்தியை பிரதமராக தொடர உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.

அதற்கு மறுநாள் ஜூன் 25 ஆம் தேதி நள்ளிரவில் இந்தியாவில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. நாட்டில் அவசரநிலை 1975 ஜூன் 25-ம் தேதி முதல் 1977-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதிவரை அமலில் இருந்தது.

இந்த காலக்கட்டத்தில் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டது. கருத்து  சுதந்திரம் பறிக்கப்பட்டது, எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசை விமர்சிப்பவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்திய வரலாற்றில் கறுப்பு நாட்களாக இந்த அவசர நிலை பார்க்கப்படுகிறது. இந்நிலையில். நாட்டில் அவசர நிலை கொண்டுவந்து இன்றோடு 45 ஆண்டுகள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...