தமிழகத்தைப் பொறுத்த மட்டில் பொய்த்தான் அரசியல்

கவிதைக்கு பொய் அழகு என ஒருஅங்கீகாரம் சமுதாயத்தில் இருக்கிறது! ஆனால் தமிழகத்தைப் பொறுத்த மட்டில் பொய்த்தான் அரசியல் என்றாகிவிட்டது!

தமிழகத்தில் அரசியல் என்றால் அதில் முக்கால் பங்கு கழகங்கள்தான்! தட்டினால் தங்கம் வரும், வெட்டினால் வெள்ளிவரும், இடித்தால் இரும்பு வரும்,! வருவதையெல்லாம் மக்களுக்கு வாரி வழங்குவோம்! ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி விற்போம்! என்றெல்லாம் பொய்யென்று உணர்ந்து தெரிந்து பேசினார்கள்!

பொய்தான் சொல்கிறோம் என்று சொன்னவர்கள் தெரிந்துதான் சொன்னார்கள் என்பது நூறு சதவிகிதம் உண்மை! ஓட்டு போட்டவர்கள் அழகாக பேசிய பொய்க்காக போட்டார்களா உண்மையென நம்பிதான் போட்டார்களா என்பது இது வரை புரியாத புதிராகவே உள்ளது!

மாநில அரசுகளின் ஒப்புதலும் ஒத்துழைப்பும் இல்லாமல் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்திட முடியாது! மக்களின் ஒத்துழைப்பு இல்லாமலும் செயல்படுத்திட முடியாது! 1967 முதல் திமுக அல்லது அதிமுக என்னும் கழகங்கள்தான் தமிழகத்தை ஆண்டுவருகிறது! ஹைட்ரோகார்பன் திட்டஅனுமதி, சோதனை அனுமதி, எரிவாய்வு எடுக்க அனுமதி, எங்கே என்ன விலைக்கு விற்பது என்னும் ஒப்புதல், விற்பனையான தொகையில் எத்தனை சதவிகிதம் மாநில அரசுக்கு என்னும் நிர்னய அனுமதி, வருடாவருடம் இன்று வரை அந்த தொகையை பெற்றுக்கொண்டிருப்பது எல்லாமே திமுக அரசு அல்லது அதிமுக அரசுதான்!

ஒப்புதல் கையெழுத்தை போட்டு அரசுக்கு பணம் வாங்குவது வெளிப்படையாக, அந்த ஒப்பந்தக்காரர்களிடம் 35 சதவிகிதம் 45 சதவிகிதம் என கட்டிங் வாங்குவது கட்சிக்காரர்கள் ரகசியமாக!

இவ்வளவையும் செய்துக்கொண்டு, ”மத்திய பாஜக அரசின் ஹைட்ரோகார்பன் திட்டம் தமிழகத்தை சுடுகாடாக்கிவிடும், அதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்” – என திமுகவினரும்! ”மத்திய பாஜக அரசு தமிழகத்தை சுடுகாடாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம் ”- என்று அதிமுகவினரும் பச்சையாக பொய்யினை தெரிந்தே சொல்கிறார்கள்! இவ்வளவுக்கும் இந்த திட்டங்களை துவக்கியது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கழக கூட்டணி அரசுகள்தான், பாஜக அரசல்ல!

ஹைட்ரோகார்பன் திட்டம் நியூட்ரினோ எரிவாயு திட்டம் ஆகிய திட்டங்களை கருனாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின் ஆகிய முதல்வர்களும் துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் பிரதமர்களும்தான் ஒப்புதல் வழங்கி செயல்படுத்தினார்கள்!

தொடர் ஒப்புதல்கள்தான் பாஜக அரசால் வழங்கப்பட்டது!

இப்போது இவர்கள் பொய்யான குற்றச் சாட்டை முன்வைப்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன!

ஒன்று காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தக்காரர்களிடம் கட்டிங் போட்டதுபோல் பாஜக ஆட்சியில் கட்டிங் போட முடியவில்லை! காரணம் பாஜக ஆட்சியில் ஒப்பந்தக்காரர்களிடம் மத்திய அரசு வேலையை சரியாக வாங்கிவிடுவதால், அவர்களால் லஞ்சம் கொடுக்க முடியவில்லை!

இரண்டாவது காரணம் பாஜக கட்சி ஊழலுக்கு எதிரான கட்சியாக இருப்பதால் அதனை தமிழகத்தில் வளர விடக்கூடாது, வளர விட்டால் கழக அரசியல் வியாபாரமே படுத்து விடும், எனவே, அவர்களை தமிழர்களுக்கு எதிரானவர்கள் என காட்டவேண்டும் என்னும் எண்ணம்!

தமிழக ரேசன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியை நல்ல தரமானதாக கிலோ ரூ.1 க்கு மத்திய அரசுதான் வழங்குகிறது,   தரமான கோதுமையை ஒரு கிலோ ரூபாய் 1 க்கு மத்திய அரசு வழங்குகிறது!

இந்த ஒரு ரூபாயை மட்டும் மாநில அரசு வழங்கிவிட்டு, நாங்கள்தான் இலவசமாக தருகிறோம் என முதலமைச்சரின் படத்தை ரேசன்கடையில் வைத்துக் கொள்கிறார்கள்!

ஒரு கிலோ அரிசி ரூபாய் 35 என வைத்துக்கொள்ளுங்கள்! அதை ஒரு ரூபாக்கு தரும் மத்திய அரசு ஒவ்வொரு கிலோவுக்கும் நமக்கு 34 ரூபாயை மானியமாக தருகிறது! மாநில அரசோ ஒரு ரூபாயை தருகிறது! 34 கொடுத்தவர் பெயரை சொல்லவேண்டுமா? அவரை புறந்தள்ளிவிட்டு ஒரு ரூபாய் தருபவரின் புகைப்படத்தை வைப்பது சரியா? ஒன்று பெரிதா? 34 பெரிதா?

தமிழகம் எங்கும் அங்கன்வாடிகளை நடத்தி தமிழக குழந்தைகளை மத்திய அரசுதான் வளர்த்துவருகிறது! தமிழகத்தில் 60,000 அங்கன்வாடிகளை மத்திய பாஜக அரசு நடத்துகிறது!

தமிழக அரசு என்ன நடத்துகிறது? இப்போது எண்ணிக்கையை சற்று குறைத்த பின்பு, 5300 சாராயக்கடைகளை தமிழக அரசு நடத்துகிறது!

60,000 ஆசிரியர்களையும் 60,000 உதவியாளர்களையும் நியமணம் செய்து, குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுத்து, பாடம் சொல்லிக்கொடுத்து, அவர்களின் அம்மாக்களுக்கும் சத்துருண்டைகளை கொடுத்து உதவித்தொகை கொடுத்து ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்கும் மத்திய பாஜக அரசு எத்தகையது? 5300 சாராய கடைகளை திறந்துவைத்து, அதில் இத்தனை பாட்டில் சாராயத்தை அவசியம் விற்றாக வேண்டும் என நிற்பந்தம் செய்வதுதான் மாவட்ட ஆட்சியாளரின் முதல் கடமை என அவரையும் சாராய வியாபாரத்தில் ஈடுபடுத்தி, தமிழக குடும்பங்களை எல்லாம் குடிகார குடும்பங்களாக்கி, வீட்டில் சட்டி பானைகளை அடித்து நொறுக்கி, மனைவியின் தாலியை அறுத்து விற்று கழகங்களின் சாராயக்கடைகளில் குடித்து, பல குடும்ப கொலைகளையும் தற்கொலைகளையும் தூண்டிவிட்டு, அரசுக்கு 30,000 கோடியையும் சாராய ஆலைகளை நடத்தும் கழக கட்சியினருக்கு 60,000 கோடியையும் ஆண்டுதோறும் சம்பாதித்துக்குவிக்கும் கழக அரசுகள் எத்தகையது?

கள்ளச்சாராயம் அதிகரித்துவிடும் என்பதற்காகத்தான் சாராயக்கடைகளை நடத்துவதாக இந்த விசயத்திலும் பொய்யைத்தான் சொல்கிறார்கள்! விபச்சாரம் அதிகரித்துவிடும் என்பதற்காக தெருவுக்கு தெரி விபச்சார விடுதிகளை கழக உடன்பிறப்புகள், மாவட்ட ஆட்சித்தலைவரின் மேற்பார்வையிலும் காவல் துறையின் பாதுகாப்பிலும் நடத்துவார்களா?

கள் குடித்தவர்களை விரட்டி விரட்டி பிடித்த தமிழக காவல்துறை இப்போது குடிகாரனுக்கும் குடிகார கடைகளுக்கும் பாதுகாப்பாக நின்று சலியூட் அடிக்கிறதே!

நாம் இப்படியே நாம் கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்து வந்தால், நாளைக்கு விபச்சார விடுதிகளும் தெருவுக்கு தெரு தோன்றி அவை சாராயக்கடை அந்தஸ்தை பெறலாம்!

ஒவ்வொரு குடும்பத்திற்கும் மருத்துவ சிகிழ்சைக்காக வருடந்தோரும் ரூபாய் 5 லட்சம் வரை வழங்கும் ஆயுஸ்மான்பாரத் என்னும் பிரதமரின் திட்டத்தை மாநில அரசு முதல்வரின் காப்பீடு என பொய் சொல்லிவருகிறது!

இப்படி தமிழக அரசியலில் தொட்டதெல்லாம் பொய்யாகவே இருக்கிறது!

இப்போது கடைசியாக ஒரு பொய்யை தமிழக எதிர்கட்சிகளும் ஆளும் கட்சியும் கட்டவிழ்த்து விட்டுள்ளன! ”தமிழகத்தில் விவசாயிகளுக்கு தரப்படும் இலவச மின்சாரத்தை மத்திய பாஜக அரசு நிறுத்திவிடப்போகிறது” என்பதுதான் அந்த வினோதமான புதிய பொய்!

இலவச மின்சாரத்தை கொடுப்பது மாநில அரசு. நிறுத்துவது மத்திய அரசா? அது எப்படி? நிறுத்துவதானால் அதை கொடுப்பவர்கள்தானே செய்யவேண்டும். தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமா?

கொடுக்கும்போது கொடுத்ததால் கிடைத்த நல்ல பெயர் மாநில அரசுக்கு! இப்போது மாநில அரசே கொடுப்பதை நிறுத்திவிட்டால், நிறுத்துவதால் ஏற்படும் கெட்டப்பெயர்மட்டும் மத்திய அரசுக்கா?

”பொய் சொல்கிறார்கள்! மத்திய அரசுக்கும் தமிழக அரசு இலவசமாக மின்சாரம் கொடுப்பதற்கும் சம்மந்தமே இல்லை! விவசாயிகளுக்கோ ஏழைகளுக்கோ யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் இலவசமாக மின்சாரம் வழங்கலாம்! மின்சார வினியோகம் மாநில அரசின் கடமையாகும். மத்திய அரசு அதில் தலையிடாது.” என்னும் வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேட்டியளித்தார்!

இந்த பொய்க்கு என்ன காரணம் என்று விசாரித்ததில் ஒரு உண்மை தெரிய வருகிறது! முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாக்குறுதி கொடுத்ததுபோல், படிப்படியாக டாஸ்க்மார்க் சாராயக்கடைகளை மூடிவிடவேண்டுமென, பாரதிய ஜனதா கட்சியிடமிருந்தும் புதிய தமிழகம் போன்ற சில கட்சிகளிடமிருந்தும் போராட்ட அழுத்தங்கள் வந்துகொண்டிருக்கின்றன. பெரும்பான்மையான மக்கள் சாராயக்கடையை மூடி விடுவதையே விரும்புகிறார்கள்! கொரோனா காலத்தில் சாராயக்கடைகள் மூடப்பட்டது, நிரந்தரமாக மூடுவது சாத்தியமானதுதான் என்பதை நிரூபித்துவிட்டது!

எனினும் சாராயக்கடையை மூடுவதை அதிமுகவும் எதிர் கட்சியான திமுகவும் விரும்பவில்லை! காரணம் அந்த கட்சியினர்தான் சாராய ஆலைகளை நடத்தி வருகிறார்கள்!

எனினும் மக்களின் நிர்ப்பந்தம் காரணமாக சாராயக்கடைகளை மூடவோ கனிசமாக கடைகளின் எண்ணிக்கையை குறைக்கவோ நேர்ந்தால் அந்த வருமான இழப்பை சரிகட்ட, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரத்தை நிறுத்திவிடுவது போன்ற இன்னும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது என மாநில அரசு திட்டமிட்டுருப்பதாக தெரிகிறது!

ஹைட்ரோகார்பன் திட்டத்தில் பொய் சொன்னதைப்போல இந்த விசயத்திலும் மத்திய அரசுமீது பழியை சுமத்திவிடலாம் என திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது!

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் பொய்யை மட்டுமே ஆதாரமாக வைத்துதான் பலரும் அரசியல் செய்கிறார்கள்!

கவிதைக்குதான் பொய் அழகு, அரசியலுக்கு பொய் அழகல்ல! என்பதுதான் எம் கருத்து! அரசியலில் பொய் புகுந்தால், அந்த பொய் அதனை சொல்வோரை தோக்கடித்துவிடும் என்பதை மக்கள்தான் தங்களின் ஓட்டுமூலம் நிரூபிக்கவேண்டும்!

– குமரிகிருஷ்ணன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...