இந்தியாவின் வளர்ச்சிக்கு முன் மாதிரி பங்களிப்புகளை வழங்கியவர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி

இந்தியாவின் ஒற்றுமையை மேலும் அதிகரிக்க தைரியமான முயற்சிகளை மேற்கொண்டவர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி என்று பிரதமர் நரேந்திர மோடி பாரதிய ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு அஞ்சலி செலுத்தினார்.

1901, ஜுலை ஆறாம் தேதி கொல்கத்தாவில் பிறந்தவர் டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி. பாரிஸ்டர் படிப்பு பயின்ற முகர்ஜி, 1929ஆம் ஆண்டில் மேற்குவங்காள மாகாண சட்ட மேலவைக்கு இந்திய தேசியகாங்கிரஸ் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1941 – 1942 ஆண்டில் மேற்குவங்க மாநில நிதியமைச்சராக பணி புரிந்தார்.

இந்து மகா சபையில் இணைந்த ஷ்யாமா பிரசாத் முகர்ஜி 1944ஆம் ஆண்டில் அந்த அமைப்பின் தலைவரானார். இந்திய விடுதலைக்குபிறகு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில், வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் .

1950ஆம் ஆண்டில் லியாகத்-நேரு ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சைகாரணமாக, ஜவஹர்லால் நேருவின் தலைமையிலான அமைச்சரவையிலிருந்து விலகிவிட்டார். 1951ம் அக்டோபர் 21 ஆம் தேதியன்று பாரதிய ஜனசங்கம் கட்சியை உருவாக்கினார். அந்த கட்சிதான் இன்று மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதீய ஜனதா கட்சியாகும்.

1952ஆம் ஆண்டில் நடந்த முதல் இந்திய நாடாளுமன்ற மக்களவைத்தேர்தலில் பாரதிய ஜனசங்கம் கட்சி மூன்று தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதில் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியும் ஒருவர்.

ஜம்மு காஷ்மீர் மாநில அரசிற்கு தனிக்கொடி, தனிச் சின்னம், தனி அந்தஸ்து தேவையில்லை என முகர்ஜி கடுமையாக எதிர்த்தார். ஒருநாட்டில் இரண்டு அரசியல் அமைப்பு சட்டமும், தேசிய சின்னமும் இருக்க இயலாது என்பதே அவரது வாதமாக இருந்தது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 370ஐ நீக்கக்கோரி, முகர்ஜி தலைமையிலான பாரதிய ஜனசங்கம், சத்தியாகிரகப் போராட்டங்களில் ஈடுபட்டது குறிப்பிடத் தக்கது.

காஷ்மீர் அரசின் அனுமதி அடையாள அட்டையின்றி காஷ்மீரில் உள்ள லக்கன்பூர் என்ற ஊரில் நுழைந்த ஷ்யாமாபிரசாத் முகர்ஜியை, மாநில காவல் துறையால்  1953 மே 11ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். 1953, ஜூன் 23ஆம் தேதியன்று ஷ்யாமா பிரசாத் முகர்ஜி விஷக்காய்ச்சலால் மரணமடைந்ததாக காவல் துறை அறிவித்தது.

காவல் துறையினரின் காவலில் இருந்த சியாமா பிரசாத் முகர்ஜியின் மரணம் குறித்து விசாரிக்க தனிவிசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற முகர்ஜியின் தாயாரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் கைது, ஜவஹர்லால் நேருவின் சதித்திட்டம் என அடல் பிகாரி வாஜ்பாய் 2004இல் குறிப்பிட்டார் என்பதும் குறிப்பிட்டு சொல்லத்தக்கது. “இந்தியாவின் வளர்ச்சிக்கு முன் மாதிரியான பங்களிப்புகளை வழங்கினார் தேசபக்தரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜி” என்று மோடி தனது ட்விட்டரில் எழுதியுள்ளார்.

இந்தியாவின் ஒற்றுமையை மேலும் அதிகரிக்க முகர்ஜி தைரியமான முயற்சிகளை மேற்கொண்டார் என்று பிரதமர் கூறினார். “அவரது எண்ணங்களும் இலட்சியங்களும் நாடுமுழுவதும் லட்சக் கணக்கானவர்களுக்கு பலத்தை அளிக்கின்றன” என்றும் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.

குடியரசுத் துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடுவும் பாரதீய ஜனசங்க நிறுவனர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளன்று நினைவு கூர்ந்தார். “ஜம்மு-காஷ்மீரை இந்தியாவில் இணைத்துக் கொள்வதற்கும், தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கும் இடைவிடாமல் போராடிய ஒருசிறந்த தேசபக்தர் அவர். தாய்நாட்டின் மீதான அவரது அன்பு எப்போதும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும்” என்று குடியரசுத் துணைத்தலைவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து ட்விட்டர் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...