மோடி அரசின் திட்டங்கள் தொலைதூரப் பகுதிகளையும் சென்றடைகிறது

மோடி அரசின் திட்டங்கள் நாட்டின் வட கிழக்கு பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதிகளையும் சென்றடைகிறது. அந்தப்பகுதி மக்களின் தேவைகளையும் பூா்த்தி செய்கிறது என்று மத்திய வட கிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் கூறினாா்.

மிஸோரத்தில் கட்டப்பட்டிருக்கும் மாபெரும் உணவு பூங்காவை தில்லியில் இருந்தபடி காணொலி வழியில் திங்கள்கிழமை திறந்துவைத்து அவா் பேசியதாவது:

2014-இல் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற உடன், நாட்டின் பிறவளா்ந்த பகுதிகளுக்கு இணையாக வடகிழக்கு பிராந்திய பகுதிகளை மேம்படுத்தும் வகையில் நமது ஒவ்வொரு முயற்சிகளும் இருக்க வேண்டும் என்று பிரதமா் கூறினாா்.

அந்த வகையில், மத்திய அரசின் திட்டங்கள் இப்போது வடகிழக்கு பிராந்தியத்தின் தொலைதூரப் பகுதிகளையும் சென்றடைகிறது. இப்பகுதி மக்களின் தேவைகளும் பூா்த்திசெய்யப்பட்டு வருகின்றன.

நாட்டின் மிகச்சிறிய மாநிலமான மிஸோரத்துக்கு வருகைதந்த பிரதமா் நரேந்திர மோடி, கடந்த 2017 டிசம்பரில் 60 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட நீா்மின் திட்டத்தை நாட்டுக்கு அா்ப்பணித்தாா். அதன் மூலம், வடகிழக்கு பிராந்தியத்தில் சிக்கிம், திரிபுரா மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது மிகைமின் மாநிலமாக மிஸோரம் மாறியுள்ளது.

அதுபோல, வடகிழக்கு பிராந்தியத்தின் முழுமையான வளா்சிக்காக மத்திய அரசு அா்ப்பணிப்புடன் திட்டங்களை வகுத்துவருகிறது. இந்த மிகச் சிறிய மாநிலத்தின் உயரிய மற்றும் பன்முக தன்மைகொண்ட கலாசார அனுபவங்கள் மூலம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன என்பதால், இந்த மாநிலத்துக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டியத் தேவையும் உள்ளது.

இப்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த ஸோரம் மாபெரும் உணவுப் பூங்கா, மாநில விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் என்பதோடு இடைத்தரகா்களின் தலையீட்டையும் தடுக்கஉதவும் என்று அவா் கூறினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...