ஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை!

ஆக.5: போன வருடம் 370 பிரிவு ரத்து; இந்த வருடம் அயோத்தி பூமி பூஜை! அடுத்தவருடம்..?!”ஆகஸ்ட் 5ஆம் தேதி தற்போதைய பாஜகவின் அரசியல் முன்னேற்ற பதிவேட்டில் முக்கியமான நாளாக இடம் பெற்றிருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியின் தொடக்ககால அரசியல் அமைப்பான ஜன சங்கம் காலத்திலிருந்து,அமைப்பின் கொள்கைகளாக மூன்று விஷயங்களை கொண்டிருந்தார்கள். காஷ்மீரை மீட்டெடுக்க ஜன சங்க நிறுவனர்களில் ஒருவரான ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி காஷ்மீரில் மர்மமான முறையில் உயிரிழந்த நாளிலிருந்து காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 ஆவது பிரிவு ரத்துசெய்யப்பட வேண்டும் என்பதை முக்கியமான கொள்கையாக கையில் வைத்திருந்தது பாஜக.,

அடுத்து தேசத்தின் அடையாளமான நாயகன் ராமபிரான் பிறந்தஇடமான அயோத்தியில் ராமர் கோயில் இடிக்கப்பட்டு அதன் மீது இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களால், பாபர் பெயரில் அமைக்கப்பட்ட மசூதியை அகற்றி ராமர்கோயிலை மீட்டெடுப்பது என்பதைக் கொள்கையாக வைத்துக் கொண்டிருந்தது.

அடுத்து நாடு முழுவதும் ஒரே சிவில்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை தனது மூன்றாவது கொள்கையாக வைத்திருக்கிறது. இம்மூன்றை வலியுறுத்தியே கடந்தகாலங்களில் பாஜக தேர்தல்களில் பங்கேற்று இருக்கிறது.

தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக இந்தமூன்றில் முதல் இரண்டு முக்கிய கொள்கைகள் மோடி தலைமையிலான பாஜகவின் இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் படிப்படியாக, அதுவும்  அடுத்தடுத்த ஆண்டுகளில் நிறைவேற்றப் பட்டுள்ளது! மூன்றாவது கொள்கையான பொது சிவில் சட்டம் இன்னும் ஓர் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்று பாஜகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்!கடந்த காலங்களில் இதைபார்க்கும் பொழுது ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி முதல் இரண்டு வாக்குறுதிகள் நிறைவேற்ற பட்டுள்ளன எனவே அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதிக்குள் மூன்றாவது உறுதியான பொதுசிவில் சட்டம் நிறைவேற்றப் படும் என்று பாஜகவினர் நம்புகின்றனர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.