ராம ராஜ்ஜியம், சிறப்பான அரசாட்சிக்கு அடையாளம்

”இந்தியாவின் வலிமை, வளம், சகோதரத்துவம் மற்றும் யாரையும் தவிர்க் காமல், அனைவருக்கும் நீதி வழங்கும் மகோன்னத அடையாளசின்னமாக, ராமர் கோவில் விளங்கும்,’

ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழா, இந்தியர்கள் அனைவருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க, உணர்வு பூர்வமான தினம்ஆகும். இதற்கான பணி, என் தலைமையில், 1990ல், சோமநாத் முதல், அயோத்திவரை நடைபெற்ற ரத யாத்திரையில் துவங்கியது. ஏராளமானோரின் விருப்பம், சக்தியை ஒருங்கிணைக்க ரதயாத்திரை உதவியது. ராம ராஜ்ஜியம், சிறப்பான அரசாட்சிக்கு அடையாளம்.

இந்திய கலாசாரம், நாகரீகம், பாரம் பரியத்தில், ராமர் மிக உன்னத இடத்தை பிடித்துள்ளார். கருணை, கண்ணியத்தின் அடையாளமாக, சாந்தசொரூபியாக காட்சி தருகிறார். இந்தியர்கள் அனைவரும், ராமரின் நற்பண்புகளை பின்பற்றி, அவர்வழி நடக்க, இந்தகோவில் உத்வேகம் அளிக்கும் என, நம்புகிறேன். ராமஜென்ம பூமியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டவேண்டும் என்பது, பா.ஜ.,வின் ஆசை. அது, என் நெஞ்சின் நீண்டகால கனவு. இக்கனவு, தற்போது நிறைவேறியுள்ளதை  கண்டு மகிழ்கிறேன்.

ராம ஜென்ம பூமி இயக்கத்திற்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஏராளமானோர் விலை மதிப்பற்ற காணிக்கைகளை வழங்கியுள்ளனர். ஏராளமான தியாகங்களை செய்துள்ளனர். அவர்களுக்கும், சன்னியாசிகளுக்கும், தலைவர்களுக்கும், ராமர்கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் இந்நன்னாளில், என் நன்றியை காணிக்கை ஆக்குகிறேன்.

ராமர்கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் வழங்கிய தெளிவான தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சி அளித்தது. இது, இந்தியர்கள் இடையிலான பிணைப்பை பலகாலத்திற்கு வலுப்படுத்தும். ராமரின் அருள், இந்தியாவிற்கும், இந்தியமக்களுக்கும் பரிபூரணமாக கிடைக்கும்.

பா.ஜ., மூத்த தலைவர் , எல்.கே.அத்வானி

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...