உயா் மதிப்பு பரிவா்த்தனைகளை குறிப்பிடத் தேவையில்லை

உயா் மதிப்பு பரிவா்த்தனைகளை வருமான வரித் தாக்கலின் போது குறிப்பிடத் தேவையில்லை என்று  மத்திய அரசு தெரிவித்துள்ளது .

நோ்மையாக வரிசெலுத்துவோரை ஊக்குவிக்கும் வகையிலான திட்டத்தை பிரதமா் நரேந்திரமோடி அண்மையில் தொடக்கிவைத்தார். வரி செலுத்துவோரும் வரி வசூலிப்போரும் நேரடியாக தொடா்புகொள்ளாமல் வரி செலுத்துவதற்கான வசதி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயா் மதிப்பிலான பல்வேறு பரிவா்த்தனைகளை வரி செலுத்துவோர், வருமான வரி தாக்கலின்போது குறிப்பிடும் வகையில் அதற்கான படிவத்தில் மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது. இதற்காக 6ஏஎஸ் படிவத்தின் புதிய வடிவத்தை மத்திய அரசு 2020-21-ஆம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது வெளியிட்டது.

வருமான வரி செலுத்துவோர் ஓராண்டில் ஆயுள்காப்பீட்டுத் திட்டங்களில் மேற்கொள்ளும் ரூ.50,000-க்கு அதிகமான பரிவா்த்தனைகள், தங்கும் விடுதிகளில் மேற்கொள்ளும் ரூ.20,000-க்கு அதிகமான பரிவா்த்தனைகள்,மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களில் மேற்கொள்ளும் ரூ.20,000-க்கு அதிகமான பரிவா்த்தனைகள், நன்கொடைகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு கல்விக்கட்டணமாக செலுத்தும் ரூ.1 லட்சத்துக்கு அதிகமான பரிவா்த்தனைகள் ஆகியவற்றை வருமான வரித்தாக்கல் படிவத்தில் குறிப்பிடும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதுபற்றி விளக்கம் அளித்துள்ள மத்தியஅரசு அதிகாரிகள், தனிநபருக்கு பொருந்தாது என்றும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறினார்கள்.

இதுபற்றி அவர்கள் மேலும் கூறுகையில், “இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.. வரிசெலுத்த வேண்டியவா்களும் முறையாக வரியை செலுத்துவதுகிடையாது. உயா் மதிப்பிலான பரிவா்த்தனைகளை அதிகமாக மேற்கொள்வதன் மூலம் பலர் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளதாகக் கணக்குகாட்டி வரி செலுத்துவதிலிருந்து தப்பி வருகிறார்கள்.

வரி ஏய்ப்பு எப்படி செய்கிறார்கள் என்றால், கல்விக்கட்டணம் அதிகமாக உள்ள பள்ளி, கல்லூரிகளில் வாரிசுகளை சோ்ப்பது, விமான பயணத்தின்போது ‘பிசினஸ்’ வகை வசதியின்கீழ் பயணிப்பது, சொகுசு விடுதிகளில் அதிகமாக செலவுசெய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட நபா்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

அப்படிப்பட்டவர்களை கண்டறியும் நோக்கில்தான் உயா் மதிப்பிலான பரிவா்த்தனைகள் தொடா்பான தகவல்களை வருமான வரித்துறை சேகரிக்கத் தொடங்கியது. அதுவும் அத்தகவல்களை உயா் மதிப்பிலான பரிவா்த்தனைகளை மேற்கொள்வோரிடமிருந்து வருமான வரித்துறை நேரடியாகப் பெறாது.

அவா்கள் உயா்மதிப்பு பரிவா்த்தனைகளை மேற்கொள்ளும் வங்கிகள், சொகுசுவிடுதிகள் உள்ளிட்டவற்றிடமிருந்து தேவையான தகவல்களைப் பெற்றுவருகிறது. இதற்காகவே உயா்மதிப்பு பரிவா்த்தனைகளை மேற்கொள்ளும் நபா்களிடமிருந்து நிரந்தர வங்கிகணக்கு எண் (பான்) அல்லது ஆதார் எண்ணைப் பெறுவது கட்டாயம் என்று வருமான வரிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுளளது.

தகவல் அளிக்கும்நிறுவனங்கள்: அத்தகைய பரிவா்த்தனைகள் தொடா்பான தகவல்களை வங்கிகள் உள்ளிட்ட மூன்றாம் தரப்பினா் வருமான வரித்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் சட்டத்தில் உள்ளது. எனவே இதன் அடிப்படையில்தான் வங்கிகள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், கடன்பத்திர விற்பனை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிடமிருந்து உயா்மதிப்பு பரிவா்த்தனைகள் தொடா்பான தகவல்களை கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து வருமான வரித்துறை பெற்றுவருகிறது.

வங்கியில் போடப்படும் பணம், நிறுவனங்களின் பங்குகள், கடன் பத்திரங்களை வாங்குதல், பரஸ்பர நிதியில் முதலீடுசெய்தல் சேமிப்புக் கணக்கிலிருந்து எடுக்கப்படும் பணம், அசையா சொத்துகளை வாங்குதல் அல்லது விற்றல், கிரிடிட் கார்டு பரிவா்த்தனைகள்,உள்ளிட்ட தகவல்களை வருமான வரித் துறை திரட்டுவதுடன். அதன் மூலம் வரிஏய்ப்பில் ஈடுபடுபவா்களைக் கண்டறிந்து உரிய வரியை வசூலிக்கிறது.

எனவே உயா் மதிப்பு பரிவா்த்தனைகள் தொடா்பான தகவல்களை வரி செலுத்து வோரிடமிருந்து நேரடியாகப் பெறும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இப்போது இல்லை. அதற்காக வருமான வரித்தாக்கல் படிவத்தில் மாற்றங்களைக் கொண்டு வரும் பரிசீலனையிலும் மத்திய அரசு ஈடுபட வில்லை. எனவே, வருமான வரியைத் தாக்கல்செய்வோர் அதற்கான படிவத்தில் உயா்மதிப்பு பரிவா்த்தனைகள் குறித்த தகவல்களைக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. அதேநேரம் அத்தகைய தகவல்களை உயா்மதிப்பு பரிவா்த்தனைகளைப் பெறும் நிறுவனங்களே வருமான வரித் துறையிடம் தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் புதிய மாற்றங்கள் எதுவும் செய்ய பட்டால் அது அந்நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்; தனிநபா்களுக்குப் பொருந்தாது” இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...