தூதரகங்கள் வாயிலாக போா் தளவாடங்களின் ஏற்றுமதி

வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள் வாயிலாக போா் தளவாடங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை வளா்ச்சிப்பாதைக்குக் கொண்டுசெல்லும் நோக்கில் ‘சுயச்சாா்பு இந்தியா’ திட்டத்தை பிரதமா் நரேந்திரமோடி அண்மையில் அறிமுகப்படுத்தினாா். அனைத்து துறைகளிலும் நாட்டை சுயச்சாா்பு அடையச் செய்வதே இலக்கு என்றும் அவா் அறிவித்தாா். சுதந்திர தின உரையின்போது சுயச்சாா்பு இந்தியா திட்டத்தின் அவசியம்குறித்து அவா் உரையாற்றியிருந்தாா்.

இத்தகைய சூழலில், உள்நாட்டில் உற்பத்தியாகும் போா்த் தளவாடங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான திட்டங்களை மத்திய அரசு வகுத்துவருகிறது.

இதுதொடா்பாக இந்திய வா்த்தகசபைகள் மற்றும் தொழிலகங்களின் சம்மேளனம் (ஃபிக்கி) சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற இணையவழிக் கருத்தரங்கில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தித் துறை செயலா் ராஜ்குமாா் கூறியதாவது:

இந்தியாவுடன் நட்புறவைப் பேணிவரும் நாடுகளுக்கு எந்த மாதிரியான போா்த் தளவாடங்கள் தேவைப்படுகின்றன என்ற விவரங்களை இணைய வழிக் கருத்தரங்குகள் வாயிலாக நிறுவனங்கள் சேகரிக்க உள்ளன. அதன் மூலமாக அத்தகைய தளவாடங்களைத் தயாரித்து அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

இந்த நடவடிக்கை பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் பொதுத் துறை நிறுவனங்களுக்குப் பெரும் பயனுள்ளதாக அமையும். தளவாடங்கள் ஏற்றுமதியை அதிகரிப் பதற்கான நடவடிக்கைகளை தூதரகம் வாயிலாக மேற்கொள்ளவும் மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது.

உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதற்காக 101 தளவாடங்களின் இறக்குமதியை படிப்படியாகக் குறைக்கும் செயல் திட்டம் அண்மையில் வெளியிடப் பட்டது.

அதேபோல் கூடுதல் தளவாடங்களின் இறக்குமதிக்குத் தடைவிதிக்கும் வகையில் இரண்டாவது செயல் திட்டத்தை வெளியிட மத்திய அரசு தயாராகிவருகிறது. அதன் காரணமாக பாதுகாப்பு தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு நிறுவனங்கள் அதிகளவில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில், உலகரங்கில் இந்தியாவை முன்னணியில் இடம்பெறச் செய்வதை நாம் இலக்காகக் கொள்ளவேண்டும் என்றாா் ராஜ் குமாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...