இவரைப் பார்த்துதான் நக்கல் அடிக்கிறார்கள்

முன்பெல்லாம் படித்தவர்கள் அரசியலுக்கு வருவதே அபூர்வமாக இருந்தது (தமிழ்நாட்டை பொறுத்தவரை இப்பொழுதும்தான்).. அப்படியே வந்தாலும் பெயரளவில் ஒரு graduate பட்டத்தை விலைக்கு வாங்கி போட்டுக்கொள்வார்கள்.

ஆனால் இன்று அண்ணாமலை போன்ற ஒரு 36 வயது இளைஞர் அரசியலுக்கு வருவதை தமிழ்நாடு தலையில் தூக்கிவைத்து கொண்டாடியிருக்க வேண்டும்.. ஏன்? முதலில் இந்த மனிதர் IIM ல் முடித்தவர்.. முதலில் IIM இல் நுழைய 1 லட்சம் பேர் CAT பரீட்சை எழுதுகிறார்கள் என்றால் முதல் ஆயிரம்பேருக்கு மட்டுமே இடம் கிடைக்கும்.. அதில் சிலர்முடிக்க முடியாமல் dropout செய்துவிடுவார்கள்… இவர் நேராக ஒரு கார்ப்பரேட் வேலைக்கு போயிருந்தால் இன்று குறைந்தபட்சம் மாதம் 5 லட்சம் சம்பாதித்துக்கொண்டிருப்பார்.. ஆனால் அதைவிட்டுவிட்டு civil service படிக்கச்சென்றது என்பதே பெரிய விஷயம்..

IIM ல் படித்தவர்களுக்கு நிர்வாகத்திறன் என்பது சர்வசாதாரணமாக இருக்கும்.. அதோடு இந்த மனிதருக்கு public service அனுபவமும் கலந்திருக்கிறது மிகப்பெரிய பிளஸ்.. வயதோ வெறும் 36 . இந்தவயதில் இப்படி உயர்பதவியிலிருந்து விலகி, கார்ப்பரேட் வேலை வேண்டாம் என்று விலகி பொதுச்சேவைக்கு வருவதை தமிழ்நாடே கொண்டாடி இருக்கவேண்டும்.. இந்த பையனுக்கு இப்பொழுது கார்ப்பரேட் வேலைக்கு போனாலும் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கும்.. ஆனால் இங்கே என்ன நடக்கிறது? இவரைப் பார்த்துதான் நக்கல் அடிக்கிறார்கள்…ஏன், எதனால்?

ஏனென்றால் இவர்களுக்கு கையில் இருக்கும் ஒரே ஆயுதம் troll மட்டும்தான்.. இவரை பார்ப்பனன் என்று திட்ட முடியாது… முட்டாள் என்று சொல்லமுடியாது (IPS படித்தவன் முட்டாள் என்றால் இவர்களெல்லாம் என்னவாம்?) இவர் மீதுள்ள clean image , அதேபோல கர்நாடக மக்களால் சிங்கம் என்று போற்றப்பட்ட heroic image ஐ காலி செய்யவேண்டும்.. அதற்க்கு கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக்கொண்டு ஏதாவது சின்ன தப்பு செய்வாரா என்று பார்த்து , கிண்டல், கேலி பேசவேண்டும்.. இதில் அறிவாளித்தனம் எதுவும் இல்லை.. பொறாமை என்பது தெளிவாக தெரிகிறது.
கெட்டவர்களை ஒருவழி செய்வது என்கிற முடிவோடுதான் வந்திருக்கிறார் என்பது அவர் பேசும் தெளிவான பேச்சுக்களில் தெரிகிறது..

இனி இந்த தீப்பொறி மஹா அக்னியாக உருவெடுத்து தீயவர்களை பஸ்பம் ஆக்கட்டும்..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

மருத்துவ செய்திகள்

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...