கிராமப்புற பகுதிகளில், நகர்ப்புற வசதிகளை உருவாக்குவதே நோக்கம்

இந்த நாள் பிகாருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டுக்குமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தநாளாக இருக்கும் . தற்சார்பு இந்தியாவில் கிராமங்களுக்கு முக்கிய பங்கு அளிப்பதற்கு அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவகிறது, பிகாரில் நடப்பது அதன் தொடக்கம்தான் . இந்தத் திட்டத்தின் கீழ் 6 லட்சம் கிராமங்களுக்கு 1000 நாட்களில் ஆப்டிகல் பைபர் மூலம் இன்டர்நெட் சேவைகள் அளிக்கப்படும் . பிகாரில் 45,945 கிராமங்கள் இதில்அடங்கும். நகர்ப்புறங்களை விட கிராமப் பகுதிகளில் இன்டர்நெட் பயனாளர்கள் அதிகமாக இருப்பார்கள் என்று சில ஆண்டுகளுக்கு முன்புவரை யாரும் நினைத்துகூட பார்த்திருக்கமுடியாது .

டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் முன்னோடியாக இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது . 2020 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் யு.பி.ஐ. மூலம் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், கிராமங்களில் உள்ளவர்களுக்கும் தரமான, அதிகவேகமான இன்டர்நெட் வசதி கிடைக்க வேண்டியது அவசியம் .

அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் காரணமாக ஏற்கெனவே 1.5 லட்சம் கிராமங்களுக்கு ஆப்டிகல் பைபர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது , 3 லட்சத்துக்கும் அதிகமான பொதுச் சேவைமையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. வேகமான இணைப்பு மூலம்  மாணவர்களுக்கான கல்விவசதிகள் சிறப்பாகக் கிடைக்கும், டெலி மருத்துவ வசதி கிடைக்கும் , விதைகள், தேசிய அளவிலான மார்க்கெட்களில் புதிய உத்திகள் பற்றி விவசாயிகள் அறிய முடியும் என்றும், வானிலை நிலவரங்கள் குறித்து உடனுக்குடன் அறிய முடியும் . விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விரைவாக நாடுமுழுக்கவும், உலக நாடுகளுக்கும் அனுப்பி வைக்க முடியும்.

நாட்டின் கிராமப்புற பகுதிகளில், நகர்ப்புற வசதிகளை உருவாக்குவதுதான் அரசின் நோக்கம் .முன்னர் கட்டமைப்புகளுக்கான திட்டமிடல் ஒருசார்பாக இருந்தது . அடல் பிகாரி வாஜ்பாயி பிரதமராக இருந்தபோதுதான் வளர்ச்சிக்குரிய முக்கியத்துவம் தரப்பட்டது . அரசியலைவிட கட்டமைப்பு வசதிக்குதான் வாஜ்பாயி முன்னுரிமை அளித்தார்.

பன்முகப் போக்குவரத்து நெட்வொர்க் உருவாக்குவது தான் இப்போதைய அணுகுமுறையாக உள்ளது. இதில் ஒவ்வொரு வகையிலான போக்குவரத்து வசதியும், ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டதாக இருக்கும். கட்டமைப்பு உருவாக்கம் தொடர்பான திட்டங்களில் இப்போது காட்டப்படும்வேகம், முன் எப்போதும் இல்லாதளவில் உள்ளது. இன்றைக்கு 2014க்கு முன்பு இருந்ததைவிட இரட்டிப்பு வேகத்தில் நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றன. 2014க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, நெடுஞ்சாலை கட்டுமானத்தில் 5 மடங்கு அதிகமாக செலவிடப்படுகிறது.

வரக்கூடிய 4 – 5 ஆண்டுகளில் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.110 லட்சம் கோடிக்கும் அதிகமாக செலவுசெய்யப்படும். இதில் ரூ.19 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை நெடுஞ்சாலைகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.. 2015ல் அறிவிக்கப்பட்ட பிரதமரின் தொகுப்புத் திட்டங்களின் கீழ், 3000 கிலோமீட்டர் நீளத்துக்கான தேசிய நெடுஞ்சாலைகள் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. கூடுதலாக பாரத்மாலா திட்டத்தில் ஆறரை கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை உருவாக்கப் படுகிறது.  வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவை இணைக்க 6 திட்டங்களில் பணிகள் நடந்து வருகின்றன .

பெரியநதிகள் இருப்பதுதான் பிகாரில் இணைப்பு வசதியை உருவாக்குவதில் பெரிய தடையாக இருந்தது. இதனால்தான் பிரதமரின் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது, பாலங்கள் கட்டுவதில் சிறப்புகவனம் செலுத்தப்பட்டது. பிரதமரின் தொகுப்புத் திட்டத்தின் கீழ் கங்கையின் மீது 17 பாலங்கள் கட்டப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றின் பணிகள் முடிந்துவிட்டன. அதேபோல, காண்டாக் மற்றும் கோசி நதிகளின் மீதும் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

பல்வேறு தடைகளில் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை பெற்றுத்தருவதற்கு இந்தச் சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்குப் புதியஉரிமைகள் கிடைக்கும். தங்கள் விளைபொருட்களை எந்த ஊரில் உள்ள, எந்த ஒருநபருக்கும் விவசாயி நிர்ணயிக்கும் விலைக்கு விற்பதில் அவர்களுக்கு இனி எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்காது.

முன்னர் சுயநலக்காரர்கள் பணம்சம்பாதிக்கும் வகையில் இருந்த நடைமுறையால், அப்பாவி விவசாயிகள் ஏமாற்றப்பட்டு வந்தனர்  அதிக லாபம் கிடைக்கும் இடத்தில் விவசாயி தனது விளைபொருளை விற்க முடியும்.பிகாரில் உருளைக்கிழங்கு வியாபாரிகள் பயன் பெற்றது பற்றிக் கூறலாம் , மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் எண்ணெய் வித்து விளைவிக்கும் விவசாயி, புதிய திட்டத்தின் கீழ் 15 முதல் 30 சதவீதத்துக்கும் அதிகமாக லாபம்ஈட்டுவர் .

இந்த மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து எண்ணெய்மில் உரிமையாளர்கள் நேரடியாக எண்ணெய் வித்துக்களை கொள்முதல் செய்து கொள்கிறார்கள். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் பருப்புவகைகள் உபரியாக இருக்கும். அந்த விவசாயிகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 15 முதல் 25 சதவீதம்வரை கூடுதல் விலைகள் பெற்றிருக்கிறார்கள். பருப்பு மில் உரிமையாளர்கள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ததால் இந்தப்பயன் கிடைத்துள்ளது.

வேளாண் சந்தைகள் மூடப்படாது . முன்பிருந்ததைப்போல அவை தொடர்ந்து செயல்படும் . கடந்த 6 ஆண்டுகளில் வேளாண் சந்தைகளை நவீனமாக்குதல் மற்றும் கம்ப்யூட்டர் மயமாக்குவதற்கு தேசியஜனநாயகக் கூட்டணி அரசுதான் பணிகளை மேற்கொண்டு வருகிறது .

குறைந்தபட்ச ஆதரவுவிலை நடைமுறை முன்பிருந்ததை போல தொடரும் . விவசாயிகளை தவறாக வழிநடத்தும் இதேசுயநலவாதிகள் தான், குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை பலஆண்டுகளாகக் கிடப்பில் போட்டிருந்தார்கள் . எப்போதும் போல ஒவ்வொரு பருவத்திற்கும் அரசு குறைந்தபட்ச ஆதரவுவிலைகளை அறிவிக்கும் .

இடுபொருள் செலவு அதிகரிப்பு காரணமாகவும் குறைந்தவிளைச்சல் காரணமாக குறைந்த லாபம் மட்டுமே கிடைப்பதாலும் 85 சதவீதத்துக்கும் அதிகமான விவசாயிகள் இன்னும் சிறிய அல்லது விளிம்புநிலை விவசாயிகளாகவே இருந்துவருகிறார்கள் . விவசாயிகள் யூனியனாகசேர்ந்தால் இடுபொருள் செலவுகளை குறைத்து, நல்ல வருமானத்தை ஈட்ட முடியும் . கொள்முதல் செய்பவர்களுடன் பேரம்பேச முடியும்.

இந்த சீர்திருத்தங்கள் காரணமாக வேளாண் துறையில் முதலீடு அதிகரிக்கும், விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தின் வசதிகள் கிடைக்கும், விவசாய விளைபொருட்கள் அதிகஎளிதாக சர்வதேச சந்தைகளை அடையமுடியும். பிகாரில் உள்ள ஐந்து விவசாயிகளின் விளைபொருள் நிறுவனங்கள், மிகப் பிரபலமான அரிசி விற்பனை நிறுவனத்துடன் எப்படி அண்மையில் ஒப்பந்தம் செய்துகொண்டன , இந்த ஒப்பந்தத்தின்படி, விவசாயிகளின் விளைபொருள் நிறுவனங்களிடமிருந்து நாலாயிரம்டன் நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதே போல, இந்த சீர்திருத்தங்களால், பால் உற்பத்தி நிறுவனங்களும் பலனடையும்.

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திலும் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்தச்சட்டத்தின் சிலவிதிமுறைகள் விவசாயிகளின் சுதந்திரத்திற்குத் தடையாக இருந்தன. பருப்புகள், எண்ணெய் வித்துகள், உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை கட்டுப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இப்போது விவசாயிகள் பெருமளவில் தங்கள் விளைபொருட்களை குளிர்பதனக்கிடங்கில் சேமித்துவைக்க முடியும். நமது நாட்டில், சேமிப்பு தொடர்பான சட்டப்பூர்வ பிரச்சினைகளை நீக்கிவிட்டால், குளிர்பதனக் கிடங்குகள் வசதி இன்னும் பெருகும்.

வேளாண்மையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தங்கள் குறித்த விஷயங்களில் விவசாயிகளை தவறாகவழிநடத்த சில சுயநலவாதிகள் முயற்சி செயகின்றனர். . 2014க்கு முந்தைய 5 ஆண்டுகளில் இருந்ததைவிட, கடந்த 5 ஆண்டுகளில் பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துகளை அரசு கொள்முதல் செய்யும் அளவு சுமார் 24 மடங்கு அதிகரித்துள்ளது . இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காலத்தில், ரபி பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக கோதுமைகொள்முதல் செய்யப்பட்டது .

இந்த ஆண்டு ரபி பருவத்தில், விவசாயிகளுக்கு கோதுமை, தானியம், பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துகள் கொள்முதலில் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.1.13 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டைவிட இது 30 சதவீதம் அதிகம்.

அதாவது கொரோனா காலத்தில், அரசின் கொள்முதல் முந்தைய காலங்களை விட அதிகமாக இருந்தது என்பதுடன், விவசாயிகளுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்ய பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நவீன சிந்தனையுடன், புதிய நடைமுறைகளை உருவாக்கித் தருவது தான் 21வது நூற்றாண்டு இந்தியாவின் பொறுப்பாக இருக்கிறது.

பிகாரில் ரூ.14000 கோடி மதிப்பில் ஒன்பது தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குப் பிரதமர்  நரேந்திரமோடி அடிக்கல் நாட்டி. மாநிலத்தில் ஆப்டிகல் பைபர் மூலம் இன்டர்நெட் சேவைகள் அளிக்கும் திட்டத்தையும் இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்து பிரதமர்  நரேந்திர மோடி, பேசியது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...