நாடாளுமன்றத்தால் சமீபத்தில் ஒப்புதலளிக்கப்பட்ட தொழிலாளர்சட்டங்கள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்களைப் பற்றிய பயங்களையும், சந்தேகங்களையும் மத்தியதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் போக்கியுள்ளது.
இவற்றைப் பற்றிய விமர்சனங்கள் ஆதாரமற்றதென்றும், தேவையற்றதென்றும் அமைச்சகம் கூறியது. பணியாட்கள் நீக்கம் மற்றும் நிறுவனத்தை மூடுவதற்காக முன்கூட்டியே அனுமதிவாங்குவதற்கான பணியாளர்கள் எண்ணிக்கையை 300-ஆக உயர்த்தியிருப்பதை குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சகம், இதுகுறித்த பரிந்துரையை நாடாளுமன்ற நிலைக்குழுவும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அரசிடம் இருந்து பெற வேண்டிய முன் அனுமதி மட்டும் தான் நீக்கப்பட்டுள்ளதே தவிர, இதர பலன்கள் மற்றும் பணியாளர்களின் உரிமைகள் அப்படியேதான் உள்ளன என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
பணிநீக்கத்துக்கு முன்னதான நோட்டீஸ், பணி நிறைவுசெய்த ஒவ்வொரு வருடத்துக்கும் 15 நாட்களுக்கான ஊதியம், நோட்டீஸ் காலத்துக்கான ஊதியம் போன்ற உரிமைகளில் எந்தமாற்றமும் இல்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், மறுதிறன் வளர்த்தல் நிதியின்கீழ் கூடுதலாக 15 நாட்கள் ஊதியத்துக்கு நிகரான பணப் பலனை தொழிற்சாலை உறவுகள் குறியீடு வலியுறுத்துவதாக அமைச்சகம் கூறியுள்ளது.
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |