அக்டோபர் 3 உலகின் மிக நீள சுரங்க பாதையை திறக்கும் பிரதமர்

பிரதமர்  நரேந்திர மோடி 2020 அக்டோபர் 3 ம் தேதி  ரோட்டங்கில் அடல் சுரங்கப் பாதையைத் திறந்து வைக்கிறார்.

          உலகில் மிக நீளமான சுரங்க நெடுஞ் சாலையாக இதுஇருக்க போகிறது . 9.02 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்கநெடுஞ்சாலை, மணாலியையும் லாஹாவ் – ஸ்பிட்டி பள்ளத்தாக்கை  இணைப்பதாகவும் ஆண்டு முழுவதும் போக்குவரத்து தங்கு தடைகளின்றி நடைபெறும் வகையிலும்  அமைக்கப்பட் டுள்ளது. இதற்கு முன்பு கடும் பனிப்பொழிவின் காரணமாக வருடத்துக்கு 6 மாத காலத்துக்கு மட்டுமே போக்குவரத்துகள் இருக்கும்.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 மீட்டர்கள் (10,000 அடி) உயரத்தில்இமயமலையில் பிர் பஞ்சால் பகுதியில் அதிநவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்க பட்டது. மணாலி மற்றும் லே இடையிலான சாலைப் பயண தூரத்தை 46 கிலோ மீட்டர் அளவுக்குக் குறைப்பதாகவும்பயண நேரத்தை 4 முதல் 5 மணி நேரம்வரை குறைப்பதாகவும் இது இருக்கும்.

அடல் சுரங்கப் பாதையின் தெற்கு முனைப் பகுதி, 3060 மீட்டர் உயரத்தில் மணாலியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதன் வடக்கு முனையம் பகுதி 3071 மீட்டர் உயரத்தில் லாஹாவ் பள்ளத்தாக்கில் சிஸ்ஸுடெலிங் கிராமம் அருகே அமைந்துள்ளது.

குதிரை லாடத்தின் வடிவத்தில் அமைந்துள்ள ஒரே சுரங்கமாகஇரண்டு லேன்கள் கொண்ட இந்தப் பாதையில்வாகனங்கள்செல்ல 8 மீட்டர் அகலத்துக்கு இடவசதி உள்ளது. 5.525 மீட்டர் உயரம் வரையிலான வாகனங்கள் இதில் செல்லலாம்.

இந்தப் பாதை 10.5 மீட்டர் அகலம் கொண்டது. 3.6 X 2.25 மீட்டர் அளவில் தீ பிடிக்காதஅவசர கால சுரங்கம்பிரதான சுரங்கத்துடன் இணைக்கப்பட்டதாக இருக்கிறது.

தினமும் 3000 கார்கள் மற்றும் 1500 லாரிகள் செல்லும்வகையில் அதிகபட்சம் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய வகையில் அடல் சுரங்கப் பாதை அமைக்கப் பட்டுள்ளது.

அதிநவீன எலெக்ட்ரோ மெக்கானிக்கல் நடைமுறைகளைக் கொண்டதாககாற்றோட்டவசதி கொண்டதாக, SCADA கட்டுப்பாட்டில் இயங்கும் தீயணைப்பு அம்சங்கள் கொண்டதாகவெளிச்சம்கொண்டகண்காணிப்பு முறைமைகள் கொண்டதாக இந்தப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப் பாதையில் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில:

 

a.       இரு முனையங்களிலும் சுரங்கத்தில் நுழையும்இடத்தில் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள்.

b.       அவசரகால தகவல் தொடர்புக்கு 150 மீட்டர் இடைவெளியில் தொலைபேசி இணைப்புகள்

c.       60 மீட்டர்களுக்கு ஒரு இடத்தில் தீயணைப்பு குழாய்வசதிகள்

d.       250 மீட்டர் இடைவெளியில் சிசிடிவி பொருத்திஏதும் நிகழ்வுகளை தானாகவே கண்டறியும்வசதி.

e.       1 கிலோ மீட்டர் இடைவெளியில் காற்றின்தரத்தை கண்காணிக்கும் வசதி

f.       வெளிச்சம் ஏற்படுத்துதல் / பயணவழிகாட்டி பலகைகள் 25 மீட்டர் இடைவெளியில் அமைக்கப் பட்டுள்ளன.

g.       சுரங்கப் பாதை முழுக்க வழிகாட்டும் தகவல் அறிவிப்பு வசதி.

h.      50 மீட்டருக்கு ஒருஇடத்தில் தீ பிடிக்காத தரம் கொண்ட காற்று சீர் செய்யும் சாதனங்கள்

i.       60 மீட்டர் இடைவெளியில் கேமராக்கள்.

 

ரோட்டங் கணவாய்க்கும்கீழே முக்கியமான இந்த சுரங்கப் பாதையை உருவாக்குவதற்கான வரலாற்று முக்கியத்துவமான முடிவு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 2000 ஜூன் 03 ஆம் தேதி எடுக்கப்பட்டது. தெற்கு முனையத்தை இணைப்பதற்கான சாலைக்கு 2002 மே 26 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

பெரிய புவியியல்மலைப்பரப்பு மற்றும் வானிலைசவால்களை முறியடிக்கும் பணியில் எல்லைப் பகுதிசாலைகள் அமைப்பு நிறுவனம் (பி.ஆர்.ஓ.) தொடர்ந்து மேற்கொண்டது. மிகவும் கடுமையான 587 மீட்டர்  நீளம்கொண்ட செரி நளா பால்ட் பகுதி சாலையும் இதில் அடங்கும். இரு முனையங்களில் இருந்தும் இணைப்பு வசதி 2017 அக்டோபர் 15 ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது.

2019 டிசம்பர் 24 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்முன்னாள் பிரதமர்  அடல் பிகாரி வாஜ்பாய் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில்ரோட்டங் சுரங்கப்பாதைக்கு அவரது பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டது.

மணாலியில் தெற்கு முனையத்தில் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பிரதமர்  நரேந்திர மோடி லாஹாவ் ஸ்பிட்டி மற்றும் சோலாங் பள்ளத்தாக்கில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் 'பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி' எனப்படும், விவசாயிகளுக்கு ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் -அமித் ஷா உறுதி ஜம்மு, ''சட்டசபை தேர்தலுக்குப் பின், ஜம்மு - காஷ்மீருக்கு ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களி ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் ஜக்தீப் தன்கர் பங்கேற்பு நமது வாழ்வில்குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ஒவ்வொருவரும் ...

புதிய கல்விக்கொள்கை சிறந்த மாற ...

புதிய கல்விக்கொள்கை சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் -குடியரசுத்துணைத்தலைவர் நமது வாழ்வில் குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...