திருமாவளவனை கைது செய்ய வேண்டும்

தொடர்ந்து இந்து கடவுள்களை, இந்து கோவில்களை இழிவாக பேசி இந்துக்கள் மனம் புண்படும்படி பேசிவரும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி உள்துறை அமைச்சர் அமிதாஷா, குடியரசு தலைவர், மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் நடிகை காயத்ரி ரகுராம்.

ஏற்கனவே பலமுறை இந்துக்கள் மனம் புண்படும்படி பேசி பெரும்சர்ச்சையில் சிக்கி வரும் திருமாவளவன் சமீபத்தில் பெரியார் வளைவாசி என்ற இணையதளத்துக்கு அளித்தபேட்டியில், இந்து சனாதனத்தில் அணைந்து பெண்களும் விபச்சாரிகள் என்று அவர் பேசியுள்ளது பெரும்சர்ச்சையை ஏற்படுத்தி இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு நடிகை காயத்ரிரகுராம் கடும் எதிப்பு தெரிவித்துள்ளார்.

’’இந்து சனாதன தர்மம் பற்றி மோசமாக பேசியதற்காக திருமாவளவனை கைது செய்ய வேண்டும், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் திருமாவளவன் மீது அரசியல் அமைப்பு சட்டத்தை பயன்படுத்தவேண்டும், நமது தர்மத்திற்கு எதிராக பேசுவது நம் நாட்டுக்கு எதிரானது என்று தெரிவித்த காயத்ரிரகுராம், மேலும் நம் நாட்டை பாரதமாதா என்று நாம் அழைக்கிறோம், பார்வதி, லட்சுமி, அம்மன் மற்றும் சரஸ்வதி போன்ற பெண் தெய்வங்களை வணங்குகிறோம்.

நதிகள் அனைத்தும் பெண்கள் பெயரில் உள்ளது, அப்படியிருக்கையில் பெண்கள் பற்றி தவறாகபேசும் திருமாவளவன் எந்த வகையான மனிதர் ? என கேள்வி எழுப்பியவர் நீங்கலாம் ஒரு ஆள்…சீ… என்று குறிப்பிட்ட காயத்ரி ரகுராம், இந்து தர்மத்தைபற்றி அடிப்படை தெரியாமல் அவரது முட்டாள் தனமான பேச்சுக்களை கேட்டுகேட்டு மக்களுக்கு போர் அடித்துவிட்டது கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...