அலைக்கற்றை ஒதுக்கீடுக்கு முன்பாக பிரதமர் எழுப்பிய ஆட்சேபங்களை அந்த துறை நிராகரித்து இருப்பது முறையா? 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு என்ன அமைச்சரினுடைய சொந்த வியாபாரமா? முதலில் வருபவர்களுக்கு முதலில் ஒதுக்கீடு என்கிற முடிவை துறைசார்பாக எடுத்துவிட்டு 45 நிமிஷங்களுக்குள் மனுக்களை பூர்த்தி செய்து, உத்தரவாதங்களை அளித்து, வரைவோலைகளை நிரப்பி தர வேண்டும் என மனுதாரர்களுக்கு ஆணையிட்டிருப்பது சரியான வழிமுறையா? என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுள்ளனர் .
அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு இயந்திரத்துக்கு முழு களங்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. “ஒதுக்கீட்டை முதலில் வந்தவருக்கே முதலில் ஒதுக்கீடு” என்கிற முறையில் ஒதுக்க வேண்டாம், லாபம் தரக்கூடிய வகையில் ஒதுக்கலாம் என பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த யோசனைக்கு உரியமரியாதை தரப்படவில்லை. கண்ணுக்கு தெரிந்ததைவிட தெரியாமல் ஏதோ இருக்கிறது என்று கருதுகிறோம்.÷கூட்டு பொறுப்பில்தான் அரசினுடைய நடவடிக்கை அமைய வேண்டும். அரசாங்கத்தை தனியார் தொழில்போல நடத்த முடியாது. அரசின் நடவடிக்கைகள் நியாயமாகவும் பொதுநலனைச் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர் .
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.