அடுத்தமாதம் 50 திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவில் இணைவர்

அடுத்தமாதம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைசேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 50 பேர் அந்தக் கட்சியிலிருந்துவிலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருக்கிறார்கள் என மேற்கு வங்காள பாஜக தலைவர் திலீப்கோஷ் அறிவித்தார்.

திரிணாமுல் இருந்து விலகி பாரதியஜனதா கட்சியில் சேர்ந்தவர்கள் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு விருப்பம்தெரிவித்து இருக்கிறார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஜோதிபிரியா மாலிக் தெரிவித்திருந்தார். அவருக்கு மேற்கு வங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் புதன்கிழமையன்று சவால் விடுத்தார் மேற்கு வங்காளத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு என பூத் கமிட்டிகள் பாரதிய ஜனதா கட்சி நியமித்துள்ளது இந்த பூத்கமிட்டி உறுப்பினர்கள் யாராவது ஒருவரை நீங்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கமுடியுமா அடுத்தமாதம் பார்த்துக்கொண்டே இருங்கள் 50 திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருக்கிறார்கள் இந்தசெய்தியை மாலிக் அவர்களுக்கு நான் ஒருசவாலாகவே விடுகிறேன் .

அடுத்த வாரம் ஆறு அல்லது ஏழு திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் பாரதியஜனதா கட்சியில் இணைய இருக்கிறார்கள் இந்தஇணைப்பு நிகழ்ச்சி முதலில் நடைபெறும் அதற்குப்பிறகு பாரதிய ஜனதாக் கட்சியின் திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொள்வார்கள் என திலீப்கோஷ் தெரிவித்தார்.

அமைச்சர் மாலிக் கவனத்திற்கு ஒருதகவலை தெரிவிக்கவிரும்புகிறேன். பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வெளியேசென்ற சில எம்எல்ஏக்கள் மீண்டும் பாரதியஜனதா கட்சியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள் உதாரணமாக பங்குரா-வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் துஷார்பாபு மீண்டும் பாஜ கட்சியில் புதன்கிழமை அன்று இணைந்துவிட்டார். இதை புரிந்துகொள்ள வேண்டும் என்று திலிப் கோஷ் கூறினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.