பாஜகவிடம் இருந்து ஒழுக்கம், பண்பை திமுகவினர் கற்றுக்கொள்ள வேண்டும்

தமிழக பாஜக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் மதுரை பாண்டிகோயில் அருகே உள்ள அம்மா திடலில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேசியதாவது:

தேர்தல் பரப்புரையை அன்னை மீனாட்சி ஆசியோடு மதுரையில் தொடங்கி யுள்ளோம். பாஜகவிடம் இருந்து ஒழுக்கம், பண்பை திமுகவினர் கற்றுக்கொள்ள வேண்டும். ஓட்டுக்காக இரட்டைவேஷம் போடுபவர் மு.க.ஸ்டாலின். தற்போது இந்துக்களுக்குப் பாதுகாவலர் என்று போலி வேஷம் போடுகிறார். நாம் வெற்றிவேல் யாத்திரையை திருத்தணியில் தொடங்கியதுபோல், ஸ்டாலினையும் வேலை தூக்க வைத்தது நமக்கு கிடைத்தவெற்றி. திமுக தமிழுக்கும், தமிழருக்கும் விரோதமானது.

ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு உட்பட பல்வேறு திட்டங்களில் காங்கிரஸ், திமுக கூட்டணிசேர்ந்து கையெழுத்திட்டனர். தற்போது அதை எதிர்த்து இரட்டைவேடம் போடுகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்தது திமுக, காங்கிரஸ். இலங்கையில் கொத்துகொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டபோது வேடிக்கை பார்த்தவர் கருணாநிதி.

ஊழல்செய்ய வேண்டும், கட்டப் பஞ்சாயத்து, கமிஷன் வாங்க வேண்டும், ஏழை மக்களின் நிலங்களை அபகரிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் ஆட்சிக்கு வர திமுகவினர் நினைக்கின்றனர். திமுகவை நிச்சயமாக தமிழக அரசியலைவிட்டு விரட்டும் நாள் மே மாதம் வரப்போகிறது.

வெற்றிவேல் யாத்திரை இரண்டு வெற்றியை பெற்றுத்தந்துள்ளது. ஒன்று மு.க.ஸ்டாலினை வேலை தூக்கவைத்தோம். அடுத்து தைப் பூசத்துக்கு அரசு விடுமுறை கொடுக்க வைத்ததாகும்.

சமூக நீதியை பாதுகாக்காத திமுகவுக்கு நாம் வரும் மே மாதத்தில் தக்கபாடம் புகட்ட வேண்டும். அதற்கு நமதுகரத்தை வலுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இ ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இருப்பிடம் 1. 74ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் ...

இடைதேர்தலில் பாஜக போட்டியிட வே ...

இடைதேர்தலில்  பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை ச ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வேலை பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணபடத்துக்கு மத்திய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சிய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. கோவில்களை ஒழுங்கா ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...