தீன்தயாள் உபத்யாய் நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கபட்டது. அதில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
தீன்தயாள் உபத்யாயின் சிந்தனைகள் இன்றைக்கும் பொருந்தக்கூடியவை. அது எதிர்காலத்துக்கும் தொடரும். 1965ம் ஆண்டு இந்திய – பாகிஸ்தான் போரின்போது, போர் தளவாடங்களுக்கு வெளிநாடுகளை நம்பவேண்டி இருந்தது. அந்த நேரத்தில், இந்தியா விவசாயத்தில் மட்டுமல்ல பாதுகாப்பு மற்றும் ஆயுதங்களில் தற்சார்புபெற வேண்டும் என தீன்தயாள் கூறினார்.
இன்று, தற்சார்பு இந்தியபிரச்சாரம், கிராமப்புற ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு எதிர் காலத்தை உருவாக்குவதில் அடிப்படையாக உள்ளது.
கொரோனா தொற்றின்போது, அந்தியோதயா (கடைசி மனிதனின் வளர்ச்சி) என்ற மனநிலையை நாடுவெளிப்படுத்தியது. நாட்டின் ஏழை மக்களுக்கு அக்கறை காட்டியது.
நாங்கள் அரசியலில் ஒத்தகருத்தை மதிக்கிறோம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அரசை நடத்துகிறது. ஆனால், அரசு ஒப்புதல் என்கிற அடிப்படையில் இயங்குகிறது. நாங்கள் ஆட்சி நடத்தமட்டும் வரவில்லை. ஆனால் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல நாங்கள் வந்திருக்கிறோம். நாங்கள் தேர்தலில் ஒருவருக்கெதிராக மற்றவர் சண்டையிடுவோம். நாங்கள் ஒருவரை ஒருவர் மதிக்கவில்லை என்பது அதற்கு அர்த்தம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |