தனியார் துறைகளை, நிறுவனங்களை அவமதிக்கும் கலாச்சாரத்தை பொறுத்துக்கொள்ள முடியாது

மக்களவையில் தனியார்துறையை பிரதமர் மோடி பெருமைப்படுத்தி பேசியதற்கு இந்திய தொழிலதிபர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருடத்தின் முதல்கூட்டத்தொடர் என்பதால், நாடாளுமன்ற அவைகளில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதற்கிடையே, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மக்களவையில் பேசுகையில், நாட்டில் தனியார் துறைகளை அவமதிக்கும் போக்கு, கலாச்சாரம் தொடரந்துவருகிறது. நாட்டில் பொதுத்துறை எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதே அளவுக்கு தனியார் துறைக்குக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தனியார்துறையின் பங்களிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது.

குறிப்பாக, தொலைத் தொடர்புத்துறையிலும், மருத்துவத்துறையிலும் தனியார் நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு பல்வேறுவழிகளிலும் உதவி வருகின்றனர். ஏழை மக்கள்கூட ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள், மொபைல் போன்கள் விலை கடும்போட்டி காரணமாக மக்கள் எளிதாக வாங்கும் வகையில் குறைந்துள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் இந்தியாவால் மனிதநேய உதவிகளை பலநாடுகளுக்கும் செய்யமுடிகிறது என்றால், அதற்கு தனியார் துறை, தனியார் நிறுவனங்களின் பங்களிப்பால்தான் முடிகிறது. எனவே, தனியார் துறைகளையும், தனியார் நிறுவனங்களையும் அவமதிக்கும் கலாச்சாரம், போக்கை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது.

தனியார் துறைக்கு எதிராக நாம் நமது அவதூறான வார்த்தைகளை பயன்படுத்துவதன் மூலம் சிலரின்வாக்குகளை கடந்த காலத்தில் பெற்றிருக்கலாம். ஆனால், அந்தகாலம் கடந்துவிட்டது என்றார். நமது இளைஞர்களையும் இவ்வாறு இழிவுபடுத்த முடியாது. மனித குலத்துக்கு இன்று இந்தியா ஏதேனும் வகையில் பயன்படும் என்றால் அதில் தனியார்துறைக்கே அதிக பங்கு என்று பேசியிருந்தார். இந்நிலையில், தனியார்துறை குறித்து பிரதமர் மோடி பெருமைப்படுத்தி பேசியதற்கு இந்திய தொழிலதிபர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மகீந்திரா குழும சேர்மன் ஆனந்த் மஹீந்திரா கூறுகையில், தொற்று நோய் காலக்கட்டத்தில் பிரதமரின் வார்த்தைகள் ஊக்குவிப்பாய் அமைந்துள்ளன. நாம்இப்போது நிர்வாகம் மற்றும் செயலில் எதிர்பார்ப்புக்கு இணங்க செயல்படவேண்டியது அவசியம் என்று பாராட்டியுள்ளார்.

ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத் தலைவர் சாஜன் ஜிண்டால் கூறுகையில், இந்திய தொழிலதிபர்களுக்கு முதல் முறையாக ஒருஇந்தியப் பிரதமர் மரியாதை அளித்துப் பேசியுள்ளார். மேலும், பிரதமர் மோடி பேசியது நாட்டிற்கு செல்வத்தையும், வேலை வாய்ப்பையும் வழங்கிடும் தொழிலதிபர்கள் சமூகத்துக்கு மிகப்பெரிய உத்வேகமாகும் என்று பாராட்டிப் பேசியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...