தமிழகத்தின் தலையெழுத்தை, யார்தான் மாற்ற முடியும்?

முதல்வர் இ.பி.எஸ்., சாதாரண மக்களாலும் எளிதில் அணுகக் கூடியவர். மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிப்பதால், நிறைய திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளார்; அதே வேளையில், ஒருவேளை தி.மு.க., வெற்றிபெற்றால்…? தற்போதுள்ள அரசு கேபிள், ‘டிவி’ நிறுவனம் மூடப்படும். அதற்குபதிலாக, தி.மு.க., குடும்பத்தில் ஒருவர், புதிய நிறுவனம் துவக்கி, கேபிள், ‘டிவி’ தொழிலை நடத்துவார்.

யார் கோடீஸ்வரர், எந்த குடும்பம் கோடீஸ்வர குடும்பம் என்ற, சண்டை சச்சரவுகள் மீண்டும் ஆரம்பிக்கும். தி.மு.க., குடும்பத்தில் இப்போதே, 10க்கும் மேற்பட்ட அதிகார மையங்கள் இயங்குகின்றன.இவர்கள் அரசுத்துறைகளில் ஆதிக்கம் செலுத்துவர். தமிழகபோலீசிலும் குடும்பஆதிக்கம் தலைதுாக்கும். மகன், மருமகன், தங்கை என, அதிகார மையங்களை, போலீஸ் உயரதிகாரிகள் சார்ந்திருக்கும் நிலை ஏற்படும். அதுமட்டுமா… பெரியப்பா குடும்பம், அத்தைகுடும்பம் என, ஏகப்பட்ட, ‘குரூப்’கள் தோன்றும். இதுபோக நண்பர்கள் வட்டாரம் எல்லாரும் தடிஎடுப்பர்; அதிகார வேட்டைஆடுவர். போதாக்குறைக்கு, மாவட்டம், வட்டம், கவுன்சிலர், எம்.எல்.ஏ., என, வடிவேலுவின், ‘வண்டுமுருகன்’ ‘காமெடி சீன்’ போல, காட்சிகள் அரங்கேறும்.

எந்த தொழில் செய்தால், கோடி ரூபாய்களைக் குவிக்கலாம் என்ற முடிவுடன், தி.மு.க., குடும்ப உறுப்பினர்கள் இறங்கி விடுவர். முன்பு, திரைத்துறையினையும், ‘மீடியா’க்களையும் தங்களின் கைக்குள் கொண்டு வந்தது போல, பிற துறைகளையும், கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுவர். அப்புறம்… ‘சினிமா’வில், ‘ரிட்டயர்டு’ ஆன, வேலைவெட்டி இல்லாத ‘குரூப்’ இருக்கிறது. சத்யராஜ், பாரதிராஜா, கவுதமன் போன்றோர், தாங்கள்தான் தமிழகத்தின் கருத்தை பிரதிபலிக்கும் அறிவாளிகள் போல, அரட்டையை ஆரம்பித்து விடுவர். வைரமுத்து போன்ற, ‘அரசவை கவிஞர்’கள், வாரம் ஒருபாராட்டு விழாவை நடத்தி, புளகாங்கிதம் அடைவர். அதை, ‘ஜால்ரா டிவி’க்கள் ‘லைவ்’செய்து தங்களின் விசுவாசத்தை காட்டி, வயிறுவளர்த்துக் கொள்ளும். இதையெல்லாம் கண்டு தொலைக்க வேண்டுமென்பது, நம் தலைவிதி.

இருக்கவே இருக்கு, ஈ.வெ.ரா., குரூப். இவர்கள், எல்லா கோவிலின் முன்பும், ஈ.வெ.ரா., சிலைவைத்திட போராட்டம் நடத்துவர்; அவரது புராணத்தை, எல்லா பாட புத்தகங்களிலும் ஏற்றி விடுவர். சும்மா இருக்குமா, திருமா குரூப்? காலி நிலம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆக்கிரமிப்புசெய்து, தங்களின் கட்சிக் கொடியை நாட்டி, உரிமை கொண்டாட ஆரம்பித்து விடுவர்; ஆவணங்களையும் தயார் செய்துவிடுவர். நிலத்தின் உரிமையாளர், கோர்ட்டுக்கும், போலீசுக்கும் ஓடி, தன் நிலம் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார். இதையெல்லாம் நினைத்தாலே நெஞ்சம்பதறுகிறது. ஒருவேளை, தி.மு.க., ஆட்சிக்கு வந்துவிட்டால்… தமிழகத்தின் தலையெழுத்தை, யார்தான் மாற்ற முடியும்?

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...