குறுக்கு வழியில் பதவி பெற முதல்வர் மீது திமுக விமர்சனம்: நமச்சிவாயம்

புதுவை திமுக சட்டமன்றக்கட்சி தலைவர் சிவா மற்றும் ‘இலக்கியவாதி’, ‘தமிழ் பற்றாளர்’ என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சுப.வீரபாண்டியன் ஆகியோர் அரசியல் வரம்புமீறி அநாகரிகத்தோடு தேசியஜனநாயக கூட்டணியின் முதல்வர் ரங்கசாமியை பற்றியும், பாஜகவைப் பற்றியும் தரம்தாழ்ந்து தொடர்ந்து விமர்சித்து வருவது கண்டனத்துக் குரியது.

புதுச்சேரியில் காங்கிரஸ்- திமுக கூட்டணியை தேர்தல்மூலம் புதுச்சேரி மக்கள் விரட்டியடித்த பிறகும், தொடர்ந்து வீண் விதண்டாவாதம் பேசி, இருவரும் தரம்தாழ்ந்து அரசியல் விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

356வது சட்டப்பிரிவின் மூலம், ஆளுநர் மூலம், சபாநாயகர் மூலம், ஆட்சியைக் கவிழ்ப்பதில் அகில இந்தியளவில் கின்னஸ் சாதனைபுரிந்த காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டு, ஜனநாயகத்தைப் பற்றி திமுக பேசுவது கேலிக் கூத்தாக உள்ளது. 1990 ம் ஆண்டு ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் அல்லாடிக் கொண்டிருந்த திமுக கூட்டணி, நள்ளிரவில் நியமன சட்டமன்ற உறுப்பினர்களை பதவியேற்கவைத்து, ஆட்சி அதிகாரப்பசியை குறுக்கு வழியில் தீர்த்துக்கொண்டதை மக்கள் மறக்கவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் ரங்கசாமி மக்கள் நலத்திட்டங்களை தொய்வில்லாமல் தொடர்ந்து செய்துவருகிறார். அமைச்சரவை விரிவாக்கம் சம்பந்தமாக நடைபெறும் எங்கள் கூட்டணியின் பேச்சு வார்த்தையில் தேவையில்லாமல் திமுக மூக்கை நுழைக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணிமீது அபாண்டமாக குற்றம் சுமத்தி, குறுக்கு வழியில் பதவி பெறலாம் என்கிற குறுகிய எண்ணத்தோடு முதல்வரையும், பாஜகவையும் விமர்சனம்செய்கிற சிவாவின் பகல் கனவு என்றும் பலிக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இ ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இருப்பிடம் 1. 74ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் ...

இடைதேர்தலில் பாஜக போட்டியிட வே ...

இடைதேர்தலில்  பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை ச ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வேலை பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணபடத்துக்கு மத்திய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சிய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. கோவில்களை ஒழுங்கா ...

மருத்துவ செய்திகள்

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...