யோகி வெற்றி பெற்றது மோடிக்கு அதிருப்தியாம்!

யோகி வெற்றி பெற்றது மோடிக்கு அதிருப்தி என்றெல்லாம் உருட்டுகிறார்கள். ஏனென்றால் மோடிக்கு மாற்றாக நாளை பிரதமராகிவிடுவாராம் யோகி..😄

உண்மையில் அப்படி நடந்தால் முதலில் மகிழ்பவர் மோடிதான்..அதை மனதில் வைத்து,தனக்கு பிறகு பல தலைவர்கள் பாஜகவை வழிநடத்த வேண்டும் என்ற ஒரே காரணத்தால்தான் நேரடியாக ஆர்எஸ்எஸ்காரர்களை முதல்வராக கொண்டு வருகிறார் நரேந்திர மோடி.பட்னவிஸ் – கட்டார் எல்லோரும் ஒரு உதாரணமே.

இந்தியாவின் ஹிருதய பகுதியில்,ஒரு அடர்காவி அரசியல் பேசும் மடாதிபதியை இந்த அளவுக்கு உயர்த்திப்பிடித்து,அவர் மேல் வளர்ச்சி அரசியலை நிலைநிறுத்தி நாயக பிம்பம் தருவதே,நாளைய ‘ஹிந்து ஹிருதய் சாம்ராட்’ யோகி என்பதை அறிவுறுத்தவே..

இன்று பாஜக தொண்டர்களிடம் ஒரு ‘திரிசூல’ மனநிலை நிலை நின்றுள்ளது,அது ‘மோடி – அமித்ஷா – யோகி’ என்பதாக..இவர்கள் மூவரையும்தான் தங்கள் ஆதர்ஷ புருஷராக எடுத்துக் கொள்கிறார்கள்..

யோகியை வருங்கால பிரதமர் என சொல்வது இயல்பானது,அது அவருடைய உழைப்பிற்கான அங்கீகாரம் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவே சொன்னார்.அதுமட்டுமல்ல,2024 ல் மோடி ஆட்சி மீண்டும் அமைய 2022 ல் யோகியின் ஆட்சி உ.பியில் அமைய வேண்டும்.ஏனென்றால்,டெல்லிக்கு செல்லும் பாதை லக்னோ வழியாக என்றார்.

ஆக,யோகி வருங்கால பிரதமர் என்பது மக்களுடைய விருப்பம்,எப்படி 2009 லேயே அடுத்த பிரதமராக மோடிதான் வர வேண்டும் என்று மக்கள் பேச ஆரம்பித்தார்களோ அதே போல இப்போது யோகியை பற்றி பேசுகிறார்கள்..

அடல்பிஹாரி வாஜ்பாயின் ரத்த உறவில் வந்த சகோதரன் அல்ல லால் கிருஷ்ண அத்வானி,அத்வானியின் மகனல்ல நரேந்திர தாமோதரதாஸ் மோடி,மோடியின் உடன்பிறந்த சகோதரன் அல்ல யோகி..

இங்கே வாஜ்பாயை அத்வானியும்,அத்வானியை மோடியும்,மோடியை யோகியும்,யோகியை பட்னவிஸும்,ஒருநாள் பட்னவிஸை அண்ணாமலையும் வந்து மாற்றுவார்கள்,அந்த இடத்தை நிரப்புவார்கள்..இது தொடரும்.

காரணம் ஒன்றுதான்,பாஜக குடும்ப கட்சியோ அல்லது மொழி – இன – ஜாதியை தூக்கிப் பிடிக்கும் கட்சியோ இல்லை.பாரதத்தின் ஆன்மாவை காப்பவன் யாரோ? அதன் பெருமையை நிலைநிறுத்துபவன் யாரோ அவர்களை காலமே கொண்டு போய் அங்கே வைக்கும்..

ஜனங்களின் ஆட்சியில்,அவர்களால் தரப்பட்ட செங்கோலை உயர்த்திப் பிடிக்கும் மன்னன் அரியணை ஏறுவான்.இதெல்லாம் காலம் காலமாக ஒரு குடும்பத்துக்கு மட்டுமே சாமரம் வீசுகிற கும்பலுக்கு புரியாது.

அந்த கும்பல் தங்கள் தாழ்வுமனப்பான்மை மற்றும் பொறாமையை சரி செய்வதாக நினைத்து,மோடிக்கு யோகி போட்டி என தீயாய் எரியும் தங்கள் வயிற்றில்,மேலும் மேலும் திராவகத்தை ஊற்றிக் கொள்கிறார்கள்.மோடி – யோகி – ஷா என அனைவருமே தேசவிரோதிகளுக்குத்தான் எதிரி..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...