குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் தேசிய இயக்கம் JP நட்டா தலைமையில் நேற்று கொண்டுவரப்பட்டது

குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கான தேசிய இயக்கத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  ஜெகத் பிரகாஷ் நட்டா, புதுதில்லியில் நேற்று தொடங்கிவைத்தார். மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்கள் திர அனுப்பிரியா பட்டேல், ஜாதவ் பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஆகியோரும் இந்தநிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். பிரச்சார இயக்கத்திற்கான இலட்சினை, சுவரொட்டிகள், வானொலி விளம்பரங்கள்  உள்ளிட்டவற்றையும் இவர்கள் வெளியிட்டனர்.  மேலும் வயிற்றுப் போக்கு காலத்தில், உடலில் நீர்ச்சத்து குறைபாட்டைப் போக்குவதற்கான ஓஆர்எஸ் கரைசல் மற்றும்  ஸிங்க் மாத்திரைகளையும் அவர்கள் குழந்தைகளுக்கு வழங்கினர்.

வயிற்றுப்போக்கு காரணமாக குழந்தைகள் உயிரிழப்பதை முற்றிலும் தடுப்பதே இந்தப் பிரச்சார இயக்கத்தின் நோக்கமாகும். இதன்படி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்படவுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய ஜெ பி நட்டா, ஜல்ஜீவன் இயக்கம், தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர் கட்டமைப்பு விரிவாக்கம் போன்ற திட்டங்கள், வயிற்றுப் போக்குக் காரணமாக குழந்தைகளிடையே ஏற்படும் உயிரிழப்பை குறைக்க பெருமளவு உதவியிருப்பதாகத் தெரிவித்தார். இந்தியாவில் வயிற்றுப் போக்கு தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த சுகாதாரப் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...