நகர்ப்புற தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை பயிற்சி இயக்கம் தொடங்கப்பட்டது

பருவமழை வருவதையடுத்து தூய்மை மற்றும் துப்புரவின் சவால்கள் அதிகரித்துள்ளன. நீர் வழியாகவும், கிருமித் தொற்று வழியாகவும் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. பருவமழையோடு தொடர்புடைய சுகாதாரபாதிப்புகளைத் தணிப்பதற்கு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என்பதை அங்கீகரித்து, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் தூய்மை இந்தியாஇயக்கம் 2.0 கீழ் தூய்மைப் பயிற்சி, நோயை விரட்டுதல் என்பதற்கான இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது (2024 ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரை).   ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கனமழைகாரணமாக ஏற்படும் சுகாதாரப்பாதிப்புகளைக்  கையாள்வதற்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தயார் நிலையில் இருப்பதை இந்தமுன்முயற்சி உறுதி செய்யும்.

அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் அமல்படுத்துவதற்கான தூய்மை, துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றில் தூய்மைப் பயிற்சி, நோயை விரட்டுதல் என்பதற்கான இயக்கம் கவனம் செலுத்தும். சிறப்புத் தூய்மை இயக்கங்கள், கழிவுகளைச் சேகரித்துகொண்டு செல்லுதல், சமூக மற்றும் பொதுக் கழிப்பறைகள் அனைத்தையும் தொடர்ந்து தூய்மை செய்தல், குழந்தைகளுக்கான தூய்மைவசதிகள், போதியஅளவு  தரமான குடிநீர் விநியோகம் உள்ளிட்டவை இந்த இயக்கத்தின் முக்கிய அம்சங்களாகும்.

இதற்காக  உள்ளூர் சமூகங்களுக்கும், அமைப்புகளுக்கும் தூய்மைப் பயிற்சி அளித்தல், தண்ணீர் மேலாண்மை, துப்புரவு, தூய்மை, விழிப்புணர்வு ஆகியவற்றில் அரசு ஊழியர்களுக்குப் பயிற்சிஅளித்தல், உள்ளூரில் இருக்கும் அரசு சாரா அமைப்புகளை, சமூகக் குழுக்களை, தனியார் துறையினரை ஈடுபடுத்துதல் ஆகியவை பருவமழைக் காலத்தில் நோய் பாதிப்பைக் குறைத்து தூய்மை சூழலை ஏற்படுத்தும் தயார் நிலைக்கான முன்முயற்சிகளாகும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த ...

ஆசீர்வாதங்களை பெறுவது நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய பெண்கள் அணியை ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது ப ...

விவசாயிகளைக் கிண்டல்செய்வது போல் இருக்கிறது பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் செயல்பாடு குறித்து மத்திய வேளாண் ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல ...

உங்​களின் தந்​தை​ பெயரை சொல்ல  வெட்​கப்​ படு​கிறீர்​களா ? பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்க ...

சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிக்கிறோம் பீஹார்தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக, காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் என்னை ...

நான் ஏன் பழி ஏற்கவேண்டும்?

நான் ஏன் பழி ஏற்கவேண்டும்? நாடு முழுவதும் பலபகுதிகளில் இருக்கும் மோசமான சாலை மற்றும் ...

11 ஆண்டுகளில் பீகார் மிகப்பெரிய ...

11 ஆண்டுகளில் பீகார் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது நியூஸ் 18 இன் 'சப்சே படா தங்கல்' (‘Sabse ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...