பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவது அவசியம் கிரிராஜ் சிங்

புதுதில்லியில் உள்ள யஷோ பூமி மாநாட்டு மையத்தில் 71-வது இந்திய சர்வதேச ஆயத்த ஆடை கண்காட்சியை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் இன்று தொடங்கிவைத்தார். இந்தக் கண்காட்சி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் ஏற்றுமதியாளர்களுக்கு தனித்துவமான சந்தைத் தளமாகும் என்றும் உலகத்திற்கு இந்தியாவின் நவீன போக்குகள் மற்றும் பலவகையான தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதாகஇருக்கும் என்றும் அமைச்சர்  தொடக்க உரையில் குறிப்பிட்டார். இந்தியாவில் உற்பத்தி என்ற பிரதமரின்தொலைநோக்குப் பார்வையை நனவாக்க உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என்று அவர் கூறினார்.

இந்தியா தற்போது 7.2 சதவீத ஜிடிபி வளர்ச்சி விகிதத்துடன் வேகமாக வளர்ந்துவரும் உலகப் பொருளாதாரங்களில் ஒன்றாக  உள்ளது என்றும் 2027-28-ல் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் ஆயத்த ஆடைகள் மற்றும் ஜவுளிகளின் சந்தைமதிப்பு தற்போது 165 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் நிலையில், இதுவிரைவில் 350 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்றுஅமைச்சர் குறிப்பிட்டார். மேலும் 2030 வாக்கில் இந்த அளவை 500 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தவேண்டும் என்று தாம் கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

ஆயத்த ஆடைகள் துறையில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தை ரூ.10,000 கோடி அளவுக்கு விரிவுபடுத்துவதாக அமைச்சர் கிரிராஜ் சிங் அறிவித்தார். இந்தக் கண்காட்சியையொட்டி பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

புதுதில்லியில் இந்திய செயற்கை ...

புதுதில்லியில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐத் திறந்து வைத்தார் பிரதமர் புதுதில்லியின் பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப் ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது போட்றா வெடிய! இந்தியாவின் கைகளுக்குள் வந்த வங்கதேசம்; வெற்றி ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய பிரதமர் அலுவலகம் ஒரு பார்வை அம்மாடியோவ்! இவ்வளவு பாதுகாப்பா?; ஒரு ஈ, எறும்பு கூட ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...