அவசர நிலை மற்றும் அதனால் ஏற்பட்ட அதிகப்படியான அத்துமீறல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததற்காக மக்களவைத் தலைவரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மோடி கூறியிருப்பதாவது:
“அவசர நிலையை வன்மையாகக் கண்டித்துள்ள மக்களவைத் தலைவர், அந்தநேரத்தில் நடந்த அத்துமீறல்களையும், ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்ட விதத்தையும் எடுத்துக்காட்டியது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த நாட்களில் பாதிக்கப்பட்ட அனைவரையும் கௌரவிக்கும் வகையில் மௌனம் அனுசரித்தது ஓர் அற்புதமான செயலாகும்.
50 ஆண்டுகளுக்கு முன் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. ஆனால் இன்றைய இளைஞர்கள் அதைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியமாகும். ஏனெனில் அரசியல் சாசனம் காலில் போட்டு மிதிக்கப்பட்ட போது, பொதுமக்களின் கருத்து நசுக்கப்பட்ட போது, நிறுவனங்கள் அழிக்கப்பட்ட போது என்ன நடந்தது என்பதற்கு இதுஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு ஆகும். அவசர நிலையின் போது நடந்த சம்பவங்கள் ஒரு சர்வாதிகாரம் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம் ஆகும்.”
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |