அமைச்சர் உதயநிதி வெளியிட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ‘லோகோ’ குறித்து விளையாட்டுஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கென, 1996 முதலில் ஒரு லோகோ பயன்படுத்தப்பட்டு வந்தது. சமீபத்தில் திருப்பூர் வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, புதிய லோகோ வெளியிட்டார்.
அது குறித்து விளையாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது: முந்தைய லோகோவில் தடகள விளையாட்டு வீரர் நின்றிருப்பது போன்று இடம் பெற்றிருக்கும். எந்த ஒரு விளையாட்டையும் முன்னிலைப்படுத்தாமல் விளையாட்டு வீரர் என்பதை மட்டுமே தெரிவிப்பதாக இது இருந்தது.
உதயநிதி வெளியிட்டுள்ள லோகோவில், வாலிபால், பளு துாக்குதல், சதுரங்கம், டென்னிஸ், கால்பந்து, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கபடி, டேபிள் டென்னிஸ், கிரிக்கெட், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளின் வடிவமைப்பு இடம் பெற்றுள்ளது.
கோகோ, டென்னிகாய்ட், நீச்சல், எறிபந்து, ஹேண்ட்பால், வில்வித்தை, சைக்கிளிங், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், கேரம், யோகா உள்ளிட்டவை இடம் பெறவில்லை.
ஆணையம் சார்பில் 30க்கும் மேற்பட்ட விளையாட்டுகளுக்கு போட்டி நடத்தப்படும் நிலையில், குறிப்பிட்ட, 13 விளையாட்டுகள் மட்டுமே புதிய லோகோவில் இடம் பெற்றுள்ளன. இது விளையாட்டு ஆர்வலர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. முழுமையாக கருத்துக் கேட்டு பின், புதிய லோகோ வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
எதையும் தப்பு தப்பாக செய்வதே திராவிடம், அந்த வரிசையில் இதுவும் ஒன்று.
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |