மாநிலங்களவை 264-வது அமர்வையொட்டி ஜெக்தீப் தன்கர் ஆற்றிய உரை

மாண்புமிகு உறுப்பினர்களே, மாநிலங்களவையின் 264-வது அமர்வு தொடங்குவதையொட்டி, உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.  இது, மக்களவை மற்றும் நான்கு மாநில சட்டப்பேரவைகளுக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தல்களுக்கு பிறகு நடைபெறும் முதலாவது அமர்வு ஆகும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான பாரதத்தின் மக்கள், அவர்களது வாக்குரிமையை  செலுத்தியவேளையில், நமது ஜனநாயக அரசியல் மற்றும் நமது குடியாட்சி முறையில் உள்ள நற்பண்புகள்மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ‘ஜனநாயக திருவிழா’ வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பது, நம்அனைவருக்கும் மிகுந்த பெருமிதத்தையும், வியப்பையும் அளிக்கிறது.

அண்மையில் நடந்து முடிந்த இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தலுக்குப்பிறகு, இந்த அவையும், ஓரளவிற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த அவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட / நியமிக்கப்பட்ட 61 உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள். உறுப்பினர்கள் அவர்களின்திறமையை முழுமையாக வெளிப்படுத்தி, மக்களின் எதிர்பார்ப்புகளை  நிறைவேற்ற  பங்களிப்பை வழங்குவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயகம் மேலும் வளர பாடுபடுவோம். ஜனநாயகத்தின் சாராம்சமான பேச்சு, விவாதம், உரையாடல் ஆகிய அனைத்து முறைகளும் செழித்தோங்க நமது பங்களிப்பை வழங்குவோம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...