மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் நேற்று (28.06.2024) புதிய வலைதளம் ஒன்றை தொடங்கிவைத்தார். இத்துறையின் இணையமைச்சர் பாகீரத் சௌத்ரி மற்றும் நபார்டு வங்கித் தலைவர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். வேளாண் கட்டமைப்பு நிதியத்தின் கீழ், வழங்கப்படும் வட்டி சலுகைகளை வழங்ககோரி, வங்கிகள் அளிக்கும் கோரிக்கைகளுக்கு தானியங்கி முறையில் விரைந்து தீர்வு காண ஏதுவாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையும். நபார்டு வங்கியும் இணைந்து புதிய வலைதளம் ஒன்றை உருவாக்கியுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.
வேளாண் விளைபொருட்கள் சேமிப்புத்திறனை அதிகரிப்பதன் மூலம். விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை குறைக்கும் நோக்கத்துடன், ஒரு லட்சம் கோடி ரூபாய் மூலதனத்துடன் வேளாண் கட்டமைப்பு நிதியம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிதியத்திற்கு இதுவரை 72 ஆயிரம்கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் திரட்டப்பட்டிருப்பதுடன், அதில் இதுவரை 67,871 திட்டங்களுக்காக 43 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்புதல்அளிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு அதிகாரமளித்து, விழிப்புணர்வை
அதிகரித்து, அறிவாற்றலை பகிர்ந்துகொள்வதுடன், ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.
புதிதாக தொடங்கப்பட்ட வலைதளம் மூலம், கடன் தொடர்பான கோரிக்கைகளுக்கு தானியங்கி முறையில் ஒரே நாளில் தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், வெளிப்படைத்
தன்மையை உறுதி செய்து ஊழல் நடைமுறைகளை தடுக்கவும், புதிய வலைதளம் உதவும் எனவும் திரு சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தார்.
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |