ஆஸ்திரேலிய துணைப்பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லெசுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (04.07.2024) தொலைபேசி உரையாடல் நடத்தினார். இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் இருநாடுகளுக்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தியதுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த விஷயங்கள் பற்றியும் உரையாடியதாக பாதுகாப்பு அமைச்சர் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையே விரிவான ராணுவக் கூட்டாண்மையில் நாம் மகத்தான மதிப்பு வைத்திருக்கிறோம் என்று அவர் கூறினார்.
2023, நவம்பரில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா பாதுகாப்பு அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற இருவரும், ராணுவக் கூட்டாண்மையில் பாதுகாப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து உரையாடினார்கள். 2024-ல் வெளியிடப்பட்ட தங்களின் தேசியப் பாதுகாப்பு உத்திகள் குறித்த ஆவணத்தில் உயர்நிலைப் பாதுகாப்பு பங்குதாரராக இந்தியாவை ஆஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது முறையாக பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு ராஜ்நாத் சிங்கிற்கு திரு ரிச்சர்ட் மார்லெஸ் வாழ்த்து தெரிவித்தார். டி-20 உலக சாம்பியனாக இந்திய அணி வெற்றி பெற்றிருப்பதற்கும், பாதுகாப்பு அமைச்சருக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
72
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |