சென்னை: சென்னை அயனாவரத்தில் உள்ள மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை அவரது உருவபடத்திற்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டியில், சென்னை கொலை நகரமாக மாறிவருகிறது.
நாளை பா.ஜ. மூத்த தலைவர்கள் 5 பேர் எல்.முருகன் தலைமையில் டில்லியில் பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர்.
சென்னையில் அரசியல் தலைவர் ஒருவர் கூலிப்படையினரால் கொல்லப்படுவது இதுவே முதல் முறை. ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு நியாயம் கிடைக்கவே இப்பிரச்னை தேசிய அளவில் கொண்டுசெல்லப்படும்.
தேசிய பட்டியலினத்தவர்கள் ஆணையத்தில் 17 சம்பவங்கள் தொடர்பாக புகார் அளிக்கப்படும். கொலைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள். அரசியல் பின்புலம் உள்ளதா என ஆராய வேண்டும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |