டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் ஜே.பி நட்டா தலைமையில் நடைபெற்றது

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், டெங்குக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் டெங்கு நிலவரம் குறித்தும், நோய் தடுப்பு, கட்டுப்பாடு, மேலாண்மைக்கான தயார்நிலை குறித்தும் ஆய்வு செய்வதற்காக புதுதில்லியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா தலைமையில் உயர்நிலை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நாடு தழுவிய அளவில் டெங்கு நிலைமை குறித்தும், மத்திய சுகாதார அமைச்சகத்தின் தயார்நிலை குறித்தும் அமைச்சருக்கு விளக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சரியான நேரத்தில் நோய் கண்டறிதல் ஆகியவற்றின் காரணமாக டெங்கு நோயாளிகளின் இறப்பு விகிதம் இந்த ஆண்டில் 0.1 சதவீதமாக குறைந்துள்ளதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதை சுட்டிக்காட்டினார். டெங்குவை கட்டுப்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். டெங்குவுக்கு எதிரான தடுப்பு, கட்டுப்பாடு, நோய் மேலாண்மை நடவடிக்கைகளை முடுக்கி விடவும் வலுப்படுத்தவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

நோய்ப்பரவல் அதிகமாகப்பதிவாகும் மாநிலங்களில் தீவிரக்கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு திரு ஜே பி நட்டா வலியுறுத்தினார். டெங்கு தடுப்பு தொடர்பாக மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

டெங்கு நோய் தடுப்பு, நோய் அறிகுறிகள், சிகிச்சை நடைமுறைகள் குறித்த மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க, டெங்கு தடுப்பு, விழிப்புணர்வுக்காக 24 மணி நேரமும் செயல்படும்  உதவி தொலைபேசி  எண்ணை உருவாக்கி செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...