கடந்த 10 ஆண்டுகளில் உதம்பூர் கதுவா -தோடா பகுதி பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர்,நில ஆக்கிரமிப்பாளர்கள்  போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆகியரை ஒடுக்குவதில் எந்த சமரசமும் இன்றி அரசு செயல்படுகிறது என்று மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர்   ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

ஜம்முவின் கத்துவாவில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு, குறைகேட்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மக்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் பேசிய அவர்,  பயங்கரவாத சம்பவங்களை ஒடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். உள்ளூரில் பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அவர், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட வளர்ச்சிப் பயணம், கடந்த பத்து ஆண்டுகளில் உதம்பூர்-கதுவா தோடா நாடாளுமன்றத் தொகுதியை மிகச் சிறப்பாக மாற்றி அமைத்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் கூறினார். வட இந்தியாவின் முதல் உயிரி தொழில்நுட்ப பூங்கா, விதை பதப்படுத்தும் ஆலை,  அடல் சேது பாலம் உட்பட பல பாலங்கள் என பல திட்டங்கள் இந்தத் தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மூன்றாவது பதவிக் பதவிக்காலத்தில் இந்த வளர்ச்சிப் பயணம்  விரைவடையும் என்று மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...