ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் கார்கில் வெற்றியின் 25 ஆண்டு கால கொண்டாட்டத்தை முன்னிட்டு மத்திய அரசு வீடியோ வெளியிட்டுள்ளது.
கடந்த 1999-ம் ஆண்டில் காஷ்மீர் மாநிலத்திற்கு உட்பட்ட கார்கில் என்ற இடத்தில் பாக்., ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதனையடுத்து நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. போரில் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பலியாயினர்.
இந்த போரின் 25 வது ஆண்டு வெற்றி தினம் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மத்தியஅரசின் ராணுவத்துறை எக்ஸ் வலை தளத்தில் ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மறைந்த ராணுவ வீரர்களுக்கு பெருமையை சேர்த்துள்ளது.
முன்னதாக கார்கில் வெற்றி தினத்தை கொண்டாடும் வகையில் இந்திய ராணுவம் கடந்த 12-ம் தேதி பான் இந்தியா மோட்டார் சைக்கிள் பயணத்தை துவக்கியது.
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |