பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது, தமிழகத்தில், சட்டம் – ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு போயுள்ளதையே காட்டுகிறது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், போலீசாரும், மாநில அரசு நிர்வாகமும் சேர்ந்து ஏதோ ஒன்றை மறைக்க முயல்கின்றனர். காரணம், படுகொலையில் ஈடுபட்டதாக கூறப்படும் ரவுடிகள் சிலர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது, கைவிலங்கு மாட்டித்தான் அழைத்து சென்றிருக்க வேண்டும். ஆனாலும், ஒரு ரவுடியை சுட்டுக் கொன்றுள்ளனர்.
எந்த ஒரு காரணத்திற்காகவும், போலீசார் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. குற்ற சம்பவத்தை விசாரித்து நீதி வழங்க சட்டம், நீதிமன்றம் உள்ளது. சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் ரவுடி திருவேங்கடம் கையில் விலங்கு போட்டிருந்தால், அவர் எப்படி போலீசாரை நோக்கி சுட்டிருக்கவோ, தாக்கியிருக்கவோ முடியும்? ஏதோ ஒன்றை மறைக்கவே ரவுடி திருவேங்கடம் திட்டமிட்டு என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு, சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளோம். அந்த விசாரணை நடந்தால் தான், இந்த படுகொலையின் மூளையாக செயல்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியும்.
எனவே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |