25 கோடி இளைஞர்கள் நலனுக்காக தேசிய சுகாதாரத் திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடாக இந்தியா விளங்குகிறது என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு அபூர்வ சந்திரா தெரிவித்துள்ளார். “இந்தியாவின் இளையோர் நல்வாழ்வில் முதலீட்டுக்கான பொருளாதாரம்” என்பது குறித்த அறிக்கையை இன்று புதுதில்லியில் வெளியிட்டுப் பேசிய அவர், உலகிலேயே இந்தியா அதிக எண்ணிக்கையில் இளைஞர்களைக் கொண்டிருப்பதாகவும், இவர்கள் நமது எதிர்காலத்தின் முதுகெலும்பு என்றும் குறிப்பிட்டார்.
இவர்களின் சுகாதாரம், கல்வி, அதிகாரமளித்தல் ஆகியவற்றை உறுதி செய்வது, நமது தேசிய, சர்வதேச வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார். ஆண்களாயினும், பெண்களாயினும், ஊரகப்பகுதியாக இருந்தாலும், நகரப்பகுதியாக இருந்தாலும், திருமணம் ஆனவராக இருந்தாலும், திருமணம் ஆகாதவராக இருந்தாலும், பள்ளிக்கு உள்ளே அல்லது வெளியே இருப்பவராக இருந்தாலும் இளைஞர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுவதாக திரு அபூர்வ சந்திரா கூறினார். இளம் வயது பெண்களிடம் மாதவிடாய் கால தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கவனம் செலுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இளைஞர்கள் நலனில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு டாலருக்கும் 4.6 முதல் 71.4 டாலர் வரை பயன் கிடைக்கும் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் 41 மில்லியன் இளைஞர்கள் பயனடையும் வகையில், கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை ஆகியவற்றுக்காக 2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |