தேசிய கொடியுடன் செல்ஃபீ எடுங்க மோடி அழைப்பு

போதைப்பொருள் பிடியில் தங்களது குடும்பங்களும் சிக்கக்கூடும் என கவலைப்படுகின்றனர். அவர்களுக்கு உதவ சிறப்பு மையம் ஒன்றை மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

‛மன் கி பாத் ‘ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஒலிம்பிக் போட்டியில் நமது தேசியக் கொடியை உலகளவிற்கு எடுத்து செல்லவும், நாட்டிற்கு பெருமை சேர்க்கவும் நமது வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களை நீங்கள் உற்சாகப்படுத்த வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் 100 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட சர்வதேச கணித ஒலிம்பியாட்டில் இந்திய அணி 5வது இடத்தை பிடித்து உள்ளது.

அசாமின் மொய்டாம்கள் உலக பாரம்பரிய சின்னமாக சேர்க்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் இடம் இதுவாகும். இந்த இடத்திற்கு நீங்கள் சுற்றுலா வர வேண்டும்
ஆக., 7 தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் கைத்தறி தயாரிப்புகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது அதன் வெற்றியை காட்டுகிறது. முதல்முறையாக காதி பொருள் விற்பனை ரூ.1.5 லட்சம் கோடியை தாண்டியது

போதைப்பொருள் புழக்கம் குறித்த சவால்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தங்கள் குழந்தையும் போதைபொருள் பிடியில் சிக்கக்கூடும் என கவலைப்படுகின்றனர். இப்போது அவர்களுக்கு உதவ ‛மனஸ்’ என்ற சிறப்பு மையத்தை அரசு திறந்துள்ளது. இலவச தொலைபேசி எண் 1933 அறிமுகம் செய்துள்ளது. இதனை தொடர்பு கொண்டு மக்கள் தேவையான ஆலோசனையை பெறலாம்.

நாளை புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது. நமது கலாசாரத்தில் புலிகள் ஒரு அங்கம். புலிகள் மற்றும் மனிதர்கள் இடையே மோதல் இல்லாமல் பல கிராமங்கள் நமது நாட்டில் உள்ளன. உலகளவில் 70 சதவீத புலிகள் இந்தியாவில் உள்ளன. ஆக., 15 அன்று, கடந்தாண்டை போல் இந்தாண்டும் தேசியக் கொடியுடன் செல்பி எடுத்து சமூகவலைதளங்கள் மற்றும் ஹர்ஹர் திரங்கா இணையத்தில் பதிவேற்றம் செய்யவும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...