மருந்து பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை

அட்டவணையிடப்பட்ட மற்றும் அட்டவணையிடப்படாத மருந்துப் பொருட்களை, நிர்ணியிக்கப்பட்டதைவிட அதிக விலைக்கு விற்பனை செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரசாயன உரத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், மருந்துப் பொருட்கள் விலைக்கட்டுப்பாட்டு உத்தரவு 2013-ன் அட்டவணை 1-ல், பட்டியலிடப்பட்டுள்ள சேர்மங்கள் மற்றும் பட்டியலிடப்படாத சேர்மங்கள் மூலம் தயாரிக்கப்படும் மருந்துப் பொருட்கள், தேசிய மருந்துப் பொருள் விலை நிர்ணய ஆணையத்தால் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். இவற்றின் விலையும்  ஆண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, முந்தைய ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச சில்லறை விற்பனை விலையில், 10 சதவீதத்திற்கும் மேல் விலை நிர்ணயம் செய்ய எந்த மருந்து உற்பத்தியாளரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த விதிமுறையை மீறும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் திருமதி அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப் ...

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம் பாசத்துக்குரிய பாஜக.,வின் என் அருமைத் தாமரை சொந்தங்களே உங்கள் ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்ல ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் – அண்ணாமலை ''முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கி ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் ரவி ஆலோசனை டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீத ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீதை பிரதமர் மோடி பெருமிதம் 'யுனெஸ்கோ' உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோ ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோசனை அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...