பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை படிப்பு தொடர்பாக செப்டம்பர் மாதம் லண்டன் செல்லவுள்ள நிலையில், யார் அடுத்த தலைவர் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூரில் அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை, கட்சியின் மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சரத்குமார், மாநிலப் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாவட்டம், மண்டலம் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் என தனித்தனியாக நடத்தப்பட்டு பின்னர் அனைத்து நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில், பேசிய அண்ணாமலை, “அடுத்த 500 நாள்கள் நமக்கு மிக முக்கியமான நாள்களாகும். 500 நாள்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை ஆலோசித்து திட்டமிட வேண்டும். இந்த திருப்பூர் கூட்டத்தின் மூலம் “திருப்பூர் பிரகடனம்” அறிவிக்கப்படுகிறது. இந்த திருப்பூர் பிரகடனம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்.” என்றார்.
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |