ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு மோடிக்கு வங்கதேச அரசு உறுதி

வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என வங்கதேசத்தில் பதவியேற்றுள்ள முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு உறுதிமொழி அளித்து உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஹிந்துக்களின் வீடுகள், சொத்துகள், கோவில்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு வசிக்கும் சிறுபான்மை மக்கள் அச்சத்துடனேயே வாழ்ந்துவந்தனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள் பேரணி நடத்தினர்.
நேற்று டில்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, ” வங்கதேசத்தில் விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும். அங்கு வசிக்கும் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பு குறித்து இந்தியாவில் உள்ள 140 கோடி மக்கள் கவலை கொண்டு உள்ளனர் ” எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: முகமது யூனுஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தற்போதைய சூழல் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டோம். ஜனநாயகம், ஸ்திரமான, அமைதியான மற்றும் வளர்ச்சியடைந்த வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு எப்போதும் தொடரும். வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு அவர் உறுதிமொழி அளித்தார். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...