‘பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை நமது சமூகங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளன’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.
உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: வளர்ச்சி சார்ந்த அணுகுமுறையில் இந்தியா ஜி20யை முன்னெடுத்தது. உலகம் முழுவதும் நிச்சயமற்ற சூழல் உள்ளது. உணவு, சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்வது பெரிய சவால்களாக உள்ளன. பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை நமது சமூகங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளன.
நட்பு நாடுகள்
பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடித்தாலும், கென்யாவில் வெள்ளம் ஏற்பட்டாலும் மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவி வருகிறது. இந்தியா தனது நட்பு நாடுகளுக்கு உதவுகிறது. உக்ரைன், ரஷ்யா போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், காசாவில் உணவு, இருப்பிடம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கும் நாங்கள் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளோம்.
ஓற்றுமை
இந்தியா தனது நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உறுதிபூண்டுள்ளது. உலகளாவிய தெற்கின் நாடுகள் ஒன்றுக்கொன்று துணை நிற்க வேண்டும், பொதுவான இலக்கை அடைய ஒற்றுமையாக இருக்க வேண்டும். உலக நிர்வாகத்தை சமாளிக்க கடந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட அமைப்புகளால் தற்போதைய நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள முடியவில்லை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |