‛‛ போதை மருந்து இல்லாத நாட்டை உருவாக்குவது நமது அனைவரின் பொறுப்பு” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் போதை மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்தை திறந்து வைத்து அமித்ஷா பேசியதாவது: கடுமையான நடவடிக்கை எடுத்து, போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்கி, பிரதமரின் தீர்மானத்தை நாம் நிறைவேற்றுவது நமது பொறுப்பு. ஒவ்வொரு மாநிலத்திலும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தை உருவாக்குவது நமது இலக்கு.
கடத்தல்காரர்கள் செயற்கை போதை மருந்துகளுக்கு மாறி வருகின்றனர். அதிக தீமை விளைவிப்பதுடன், அதிக விலைக்கும் விற்பனை செய்கின்றனர். போதை மருந்து கடத்தலுக்கு ஒடிசா மற்றும் ஆந்திர கடற்கரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த மாநிலஎல்லை வழியாக கஞ்சா கடத்தப்படுகின்றன. சத்தீஸ்கரில் கஞ்சா பயன்பாடு அதிகளவில் உள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |