வந்தே பாரத் ரயில்களை நாளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடக்கி வைக்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி நாளை (2024 ஆகஸ்ட் 31) பகல் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் மூன்று வந்தே பாரத் ரயில்களைக் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பிரதமரின் ‘மேக் இன்  இந்தியா’ (இந்தியாவில் உற்பத்தி செய்வோம்), தற்சார்பு இந்தியா ஆகிய தொலைநோக்கு பார்வைகளை நனவாக்கும் வகையில், அதிநவீன வந்தே பாரத் விரைவு ரயில்கள் மூன்று வழித்தடங்களில் இணைப்பை மேம்படுத்தும். மீரட் – லக்னோ, மதுரை – பெங்களூரு, சென்னை – நாகர்கோவில் ஆகியவை அந்த மூன்று வழித்தடங்களாகும்.

மீரட் – லக்னோ இடையேயான வந்தே பாரத் ரயில், இரு நகரங்களுக்கும் இடையிலான தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது பயணிகளுக்கு சுமார் 1 மணி நேரத்தை மிச்சப்படுத்த உதவும். இதேபோல், சென்னை எழும்பூர் – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் 2 மணி நேரத்தையும்,            மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் 1 மணி நேரம் 30 நிமிடத்தையும் பயணத்தை மிச்சப்படுத்தும்.

இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் இப்பகுதி மக்களுக்கு வேகமாகவும் வசதியுடனும் பயணிக்க உலகத்தரம் வாய்ந்த வழிகளை வழங்கும். மேலும் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் இந்த ரயில்கள் இணைப்பை மேம்படுத்தும். இந்த வந்தே பாரத் விரைவு ரயில்கள்,  வழக்கமான ரயில் பயணிகள், தொழில் துறையினர், வணிகத் துறையினர், மாணவர் சமூகத்தினர் உள்ளிட்ட பல பிரிவினரின் தேவைகளைப் பெருமளவில் பூர்த்தி செய்யும் வகையில் புதிய தரத்திலான ரயில் சேவையை வழங்கும்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப் ...

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம் பாசத்துக்குரிய பாஜக.,வின் என் அருமைத் தாமரை சொந்தங்களே உங்கள் ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்ல ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் – அண்ணாமலை ''முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கி ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் ரவி ஆலோசனை டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீத ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீதை பிரதமர் மோடி பெருமிதம் 'யுனெஸ்கோ' உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோ ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோசனை அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ...

மருத்துவ செய்திகள்

கொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்!

ஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...