தமிழகத்தில் தீண்டாமை கொடுமை தலைவிரித்து ஆடுகிறது என மத்திய அமைச்சர் முருகன் வேதனை தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி, அம்பேத்கர் நகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், சமூக விரோதிகள் புகுந்து, பள்ளி சுவற்றிலும், சமையல் அறையின் பூட்டிலும், மனிதக் கழிவை பூசி அட்டூழியம் செய்துள்ளனர். மனிதக் கழிவால் ஆபாச வார்த்தைகளை எழுதி வைத்துள்ளனர். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கத் தகுதியற்றவர்கள்.
பள்ளிகளிலும், பொது இடங்களிலும் இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையிலான கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தமிழகத்தின் பல பகுதிகளில் தீண்டாமை, இரட்டைக் குவளை, இரட்டை சுடுகாடு, கோவிலுக்குள் பட்டியலின மக்கள் செல்லமுடியாத சூழல் நிலவுகிறது. எருமப்பட்டி ஊராட்சி பள்ளியில் நடந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |