ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‛‛ மாநிலத்தில் பயங்கரவாதிகள் அழித்த கோயிலை மீண்டும் கட்டுவோம். மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது சட்டப்பிரிவு திரும்பாது ” எனக்கூறினார். 90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
ஜம்முவில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமித்ஷா கூறியதாவது:
*தேசியவாத காங்கிரசின் அஜெண்டாவை காங்கிரஸ் மறைமுகமாக ஆதரிக்கிறது.
*காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது சட்டப்பிரிவு என்பது வரலாறு. அது மீண்டும் திரும்பாது. அதனை நடக்க விட மாட்டோம். இச்சட்டம் இளைஞர்களின் கைகளில் ஆயுதத்தையும் மற்றும் கற்களையும் கொடுத்தது.
*ஆண்டு தோறும், குடும்பத்தில் உள்ள முதிய பெண்களுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.உஜ்வாலா திட்டத்தின் கீழ் இரண்டு சிலிண்டர் வழங்கப்படும்.
*மாணவர்களுக்கு ஆண்டுதோறும் போக்குவரத்து அலவன்சாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.
*தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், குஜ்ஜார்களுக்கான இட ஒதுக்கீட்டில் கையை வைக்க அனுமதிக்க மாட்டோம்.
*கடந்த 10 ஆண்டுகளில் காஷ்மீரின் 10 ஆண்டுகால பொற்கால சகாப்தத்தில் அமைதி, வளர்ச்சி ஆகியவை உறுதி செய்யப்பட்டு உள்ளது.
*காஷ்மீரில் பயங்கரவாதம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
*பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படுவதை உறுதி செய்யப்படும்.
*இந்த பிராந்தியத்தில் 5 ஆண்டு காலத்தில் வளர்ச்சி ஏற்படுவதை உறுதி செய்வோம்.
*3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.
*மாநிலத்தில் பயங்கரவாதிகள் அழித்த கோயிலை மீண்டும் கட்டுவோம்.
*மத்திய அரசு திட்டங்களின் பலன்கள் மாநில மக்களுக்கு கிடைக்க செய்வோம்.
*சுற்றுலாவை வளர்க்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |