மாலத்தீவுக்கு உதவி செய்வது முதலில் இந்தியா தான் -முகமது முயிசு

மாலத்தீவுக்கு பிரச்னை என்றால் முதலில் உதவி செய்வது இந்தியா தான் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

அரசு முறை பயணமாக, இந்தியா வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று (அக்.,07) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி கூறியதாவது: பருவநிலை மாற்றம் என்பது நமது இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

பாதுகாப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து நாங்கள் விரிவாக விவாதித்தோம். மாலத்தீவு, தேசிய பாதுகாப்புப் படைகளின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான எங்கள் ஒத்துழைப்பைத் தொடருவோம். வரும் காலத்தில், இந்தியா மற்றும் மாலத்தீவுகள் UPI மூலம் இணைக்கப்படும். பொருளாதார உறவுகளை வலுப்படுத்த, வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதித்தோம்.

மாலத்தீவு மக்களுக்கு உதவி செய்வதில், நாங்கள் எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறோம். மாலத்தீவு உடன் ரூ.3,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா மற்றும் மாலத்தீவு உறவு பல நூற்றாண்டுகள் பழமையானது.

இந்தியா மாலத்தீவின் நெருங்கிய அண்டை நாடு மற்றும் நெருங்கிய நட்பு நாடு. நமது அண்டை நாட்டு கொள்கையில் மாலத்தீவு முக்கிய இடம் வகிக்கிறது. மாலத்தீவுக்கு பிரச்னை என்றால் முதலில் உதவி செய்வது இந்தியா தான். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

முன்னதாக அவரை, ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு வரவேற்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...