கடந்த 10 ஆண்டுகளில் இந்திய இளைஞர்கள் இழந்த மரியாதையை பெற்றுள்ளனர் – ஜிதேந்திர சிங்

கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்திய இளைஞர்கள் இழந்த மரியாதையை மீண்டும் பெற்றுள்ளனர் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இன்று, அவர்களின் திறமை மற்றும் ஆற்றல் உலகளவில் அங்கீகரிக்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின்லட்சுமிபாய் தேசிய உடற்கல்வியியல் கல்லூரியில் (எல்.என்.சி.பி.இ) நேரு யுவ கேந்திரா சங்கதன் ஏற்பாடு செய்திருந்த ‘மனதின் குரல் வினாடிவினா’ போட்டியின் நான்காவது பருவத்தைடாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றியடாக்டர் ஜிதேந்திரசிங், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் இந்திய இளைஞர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளைப்பாராட்டினார். இந்த நிகழ்ச்சி மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டதாகும்.

மூன்றாவது பருவத்தில், மனதின் குரல் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய அமைச்சர், இந்திய விளையாட்டுஆணையத்தின் சிறந்த சர்வதேச விளையாட்டு வீரர்களை கௌரவித்தார். நான்காவது பருவப்போட்டியில்வெற்றி பெறும் அணிக்கு தில்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளீதரன் தலைமை உரையாற்றினார். இந்திய குடிமைப் பணியை மாற்றியமைக்கஉதவிய பிரதமரின் தொலைநோக்குத் திட்டமான மிஷன் கர்மயோகியை அமல்படுத்துவதில் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் முக்கிய பங்கையும் திரு வி முரளீதரன் பாராட்டினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...