பழங்குடி மக்களுக்கான நிதி 3 மடங்கு உயர்ந்துள்ளது

பின்தங்கிய பிரிவில் உள்ள மக்களை முன்னுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் பாஜக செயல் படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெபி. நட்டா தெரிவித்தார்.

மேலும் பழங்குடி மக்களுக்கான நிதியை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஜார்க்கண்ட் தன்பாத் பகுதியில் நடைபெற்ற தேர்தல்பிரசார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஜெ.பி. நட்டா கலந்துகொண்டு பிரசாரம் செய்தார்.

அப்போது மேடையில் அவர் பேசியதாவது,

”ஜார்க்கண்ட் மாநில முன்னேற்றத்துக்காக ஐக்கியமுற்போக்கு கூட்டணி ரூ. 80,000 கோடியை ஒதுக்கியது. ஆனால் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு ரூ. 3,00,000 கோடியை ஒதுக்கியுள்ளது.

ஆயுஷ்மான் பாரத், முத்ரா யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் தேவைக்கு எப்போதுமே முதல்இடம் கொடுக்கிறார் மோடி.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபிறகே மண்டல் கமிஷன் உருவாக்கப்பட்டது. ராகுல் காந்தியிடம் ஒன்றைக்கேட்க விரும்புகிறேன். ஓபிசி பிரிவில் எத்தனைபேர் ராஜீவ்காந்தி அறக்கட்டளையில் உள்ளனர்.

காங்கிரஸ் செயற்குழுவில் ஓபிசி பிரிவினர் எத்தனைபேர் உள்ளனர்? ஆனால், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவையில் 27 பேர் ஓபிசி பிரிவைச்சேர்ந்தவர்கள்.

பின்தங்கிய மக்களை முன்னுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் உழைக்கிறது எங்கள் ஆட்சி. பழங்குடி மக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 3 மடங்கு அதிகரித்துள்ளார் பிரதமர் மோடி” எனக் குறிப்பிட்டார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...