ஓட்டு வங்கி அரசியலில் இருந்து விலகி இருப்பதே அரசின் நோக்கம்

ஓட்டு வங்கி அரசியலில் இருந்து விலகியிருப்பதே பா.ஜ., அரசின் நோக்கம். மக்களின் முன்னேற்றம், மக்களால், மக்களுக்கான முன்னேற்றம் என்பதே புதிய மற்றும் வளர்ந்த இந்தியாவுக்கான தாரக மந்திரம்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

டில்லியில், ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ நாளிதழ் சார்பில், ‘தலைமைத்துவ உச்சி மாநாடு – 2024’ நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், 100 ஆண்டுகளைக் கொண்டாடும் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டார். மேலும் நாளிதழ் சார்பில் வைக்கப்பட்ட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:

உலகம் முழுதும் நிச்சயமற்ற, உறுதியற்ற தன்மை குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. பல நாடுகளில் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. இந்த சூழலில், நம் நாட்டு மக்கள் மூன்றாவது முறையாக, என் அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். காங்., ஆட்சிக் காலத்தில், அடுத்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அரசு நடத்தப்பட்டது. ஓட்டு வங்கியை திருப்திப்படுத்த நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்த வகை அரசியலால், நாட்டில் சமச்சீரற்ற, சமத்துவமின்மை அதிகரித்தது. இது, அரசு மீதான மக்களின் நம்பிக்கையை உடைத்து விட்டது. இந்த நம்பிக்கையை தற்போது நாங்கள் மீட்டெடுத்துள்ளோம். ஓட்டு வங்கி அரசியலில் இருந்து விலகியிருப்பதே பா.ஜ., அரசின் நோக்கம்மக்களின் முன்னேற்றம், மக்களால், மக்களுக்கான முன்னேற்றம் என்பதே புதிய மற்றும் வளர்ந்த இந்தியாவுக்கான தாரக மந்திரம். இதை அடிப்படையாக வைத்து, நாட்டு மக்களின் நலனுக்காக அயராது பணியாற்றி வருகிறோம்.

மத்திய அரசு, முதலீட்டின் வாயிலாக தனித்துவமான வேலைவாய்ப்பையும், வளர்ச்சியின் வாயிலாக கவுரவத்தையும் மக்களுக்கு வழங்கியுள்ளது. பா.ஜ., அரசின் அணுகுமுறை, மக்களுக்காக பெரியளவில் சேமிப்பதும், செலவு செய்வதும் ஆகும்.

அண்டை நாடுகளின் பயங்கரவாதத்தால், சொந்த வீடுகளிலும், நகரங்களிலும் பாதுகாப்பற்ற நிலையில் அச்சத்தோடு மக்கள் இருந்தனர். ஆனால் தற்போது இந்த நிலைமை மாறி விட்டது. சொந்த இடத்திலேயே பயங்கரவாதிகள் பாதுகாப்பாக உணரவில்லை. இந்த நுாற்றாண்டு இந்தியாவின் நுாற்றாண்டாக இருக்கும். வளர்ச்சியின் வேகத்தை நம் நாடு தக்கவைத்துக் கொள்ளும். விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...