சாதனை படைத்துள்ள வய் வந்தனா சுகாதார அட்டைகள்

தன்வந்திரி ஜெயந்தி மற்றும் ஆயுர்வேத தினத்தையொட்டி (29.10.2024), புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத மருத்துவக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி, ரூ.12,850 கோடி மதிப்பிலான பல்வேறு சுகாதாரத் திட்டங்களை தொடங்கி வைத்து இருந்தார்.   சுகாதார சேவை வழங்குவதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் குறிக்கும் விதமாக, 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம் என பிரதமர் அறிவித்தார். இத்தகைய மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் வய் வந்தனா சுகாதார அட்டைகள் வழங்கப்படுவதுடன், ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்தின் கீழ், விரிவான சுகாதார சேவைகளைப் பெறும் வசதி வழங்கப்படுகிறது.

2024 அக்டோபர் 29 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், 3 வாரங்களுக்கு உள்ளாகவே, ஆயுஷ்மான் வய் வந்தனா சுகாதார அட்டைகள் பெறுவதற்காக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம்  4,880 மூத்த குடிமக்கள் இலவச சிகிச்சை பெற்றிருப்பதோடு, இதற்காக ரூ.9.42 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இதுவரை வேறு எந்த காப்பீட்டுத் திட்டத்திலும் பலன் பெறாத 70 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம். இத்திட்டத்தில், ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பணம் செலுத்தாமலேயே சிகிச்சைப் பெறலாம். ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதா அல்லது மத்திய அரசு சுகாதார சேவை போன்ற வேறு அரசுத் திட்டங்களின் கீழ் பலன் பெறுவதா என்பதை பயனாளிகளே தேர்வு செய்து கொள்ளலாம்.

பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்தில், மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் பெறலாம். மருத்துவமனை சேர்க்கைக்கு முந்தைய செலவுகளும் இதில் அடங்கும். மருந்துகள், தீவிர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை அல்லாத சேவைகள், ஆய்வகப் பரிசோதனைகள், செயற்கை உறுப்புகள் பொருத்துதல், தங்குமிடம் மற்றும் உணவு, தவறான சிகிச்சையால் ஏற்படும் பாதிப்புகள், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகும் 15 நாட்களுக்கான தொடர் சிகிச்சையைப் பெறும் வசதிகளும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...